சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜனவரி 1 முதல் வாரத்தில் 5 நாட்கள்தான் பணி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு அலுவலகங்களில் வேலை நாட்கள் 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் புதிய உத்தரவு நடைமுறைக்கு வரும்.

கொரோனா காலங்களில் சனிக்கிழமையும் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் பழைய நடைமுறையான 5 வேலை நாட்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tamilandu government offices will work five day with 100% strength in week

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில், அரசு அலுவலகங்கள், சனிக்கிழமை உட்பட, வாரத்தில், 6 நாட்கள் செயல்பட்டன. அப்போது மொத்த ஊழியர்களில் பாதிக்கு பாதி பேரை கொண்டு அலுவலகங்கள் இயங்கின. ஆனால், செப்டம்பர் 1ம் தேதி முதல், அரசு அலுவலகங்களில் முழு அளவிலான பணியாளர்கள் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர்.

மறுபடியும் எடப்பாடியாரே வந்துட்டு போகட்டுமே.. இப்ப என்ன.. சிங்கமுத்து அதிரடி..!மறுபடியும் எடப்பாடியாரே வந்துட்டு போகட்டுமே.. இப்ப என்ன.. சிங்கமுத்து அதிரடி..!

எனவே, 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல், அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும். 100 சதவீதம் ஊழியர்களுடன், வழக்கமான அலுவல் நேரத்தில், வாரத்தில் ஐந்து நாட்கள் அரசு அலுவலகங்கள் செயல்படும். இவ்வாறு சண்முகம் தெரிவித்துள்ளஅார்.

English summary
The government hereby order that the present six day working week including Saturday be reverted back to five day working week with 100% strength, says Chief secretary of Tamilandu k.Shanmugam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X