சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் பொதுத் தோ்வு இல்லாத வகுப்புகளுக்கு 50 சதவீத பாட திட்டம் குறைப்பு?

Google Oneindia Tamil News

சென்னை: பொதுத் தோ்வு நடத்தப்படாத வகுப்புகளுக்கான பாட அளவு 50 சதவீதம் வரை குறைக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள்இதுபற்றி கூறுகையில். தமிழகத்தில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கை காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடிக்கிடக்கின்றன. 8 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் , மாணவா்களின் கல்விச் சுமையைக் குறைக்கும் வகையில், 40 சதவீதம் வரை பாடத்திட்டத்தை குறைக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது.

tamilandu School curriculum for non-public classes would be reduced by 50 percent

இதன்படி, நடப்பு கல்வியாண்டு தாமதத்தை ஈடு செய்ய 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை 40 சதவீதமும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கு 30 சதவீதமும் பாட அளவு குறைக்க முடிவானது. இதற்கான பணிகளில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (எஸ்சிஇஆா்டி) ஈடுபட்டுள்ளது.

நவம்பரில் பள்ளிகளைத் திறந்தால் என்ற திட்டமிடலில்தான் இந்த அளவீடு தீா்மானிக்கப்பட்டது. ஆனால், பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று பள்ளிகள் திறப்பு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

பாம்பன் அருகே நங்கூரமிட்ட புரேவி புயல்.. ராமேஸ்வரத்தில் 12 செ.மீ. மழை பதிவுபாம்பன் அருகே நங்கூரமிட்ட புரேவி புயல்.. ராமேஸ்வரத்தில் 12 செ.மீ. மழை பதிவு

இதைக் கருத்தில் கொண்டு, பொதுத் தோ்வில்லாத வகுப்புகளுக்கு மட்டும் பாட அளவு குறைப்பு 50 சதவீதமாக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் முழுமையாக முடிந்துவிட்டன. குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரங்கள் அரசின் ஒப்புதல் பெற்று விரைவில் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
tamilandu School education department sources said the curriculum for non-public exam classes would be reduced by 50 percent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X