சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரஜினி கட்சியின் சூப்பர்வைசராக (மேற்பார்வையளர் ) தமிழருவி மணியன் நியமனம்

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினிகாந்த் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் அதற்கான அறிவிப்பை வரும் டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

Tamilaruvi Manian is appointed as Rajinikanths party Supervisor

இதனால் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் இனிப்புகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் போயஸ் தோட்டத்தில் ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நான் சொன்ன சொல்லை காப்பாற்றுவேன்.

கடந்த 2017, டிசம்பர் 31-ஆம் தேதி அரசியலுக்கு வருவதாக உறுதியளித்தேன். அதை நிச்சயம் செய்வேன் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை அறிவித்தார்.

தமிழருவி மணியன் தமிழக அரசியல்வாதியும் எழுத்தாளர், பேச்சாளர் ஆவார். இவர் பேசும் போது அருவியிலிருந்து நீர் கொட்டுவது போல் பேசுவதால் தமிழக முதல்வர் காமராஜரால் தமிழருவி என புனைப்பெயர் சூட்டப்பட்டார். 2009-ஆம் ஆணடு காந்திய மக்கள் இயக்கதைத் தொடங்கி கடந்த 2014-ஆம் ஆண்டு காந்திய மக்கள் கட்சி என்றும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி வைப்பாரா ரஜினி... திமுகவை நெருக்கடிக்குள்ளாக்குவாரா... என்ன நடக்கும்? அதிமுகவுடன் கூட்டணி வைப்பாரா ரஜினி... திமுகவை நெருக்கடிக்குள்ளாக்குவாரா... என்ன நடக்கும்?

இந்த நிலையில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்ததால் அவரது ஆலோசகராக திருச்சியில் பெரிய மாநாட்டை கூட்டினார். ரஜினி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த அடுத்த நாளான நேற்றைய தினம் ரஜினிகாந்தின் போயஸ் தோட்ட இல்லத்தில் தமிழருவி மணியன் சந்தித்து பேசினார்.

மணியன் கட்சியை தொடங்கினாலும் ஊழலற்ற ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதற்காக யாருடனும் கூட்டணி வைக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது போல் தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜகவின் அறிவு சார் பிரிவின் அர்ஜுன மூர்த்தி நியமிக்கப்படுவதாக ரஜினி அறிவித்தார்.

English summary
Gandhiya Makkal Party's President Tamilaruvi Manian is appointed as Rajinikanth's party Supervisor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X