சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்களுக்கு என்னாச்சு ரஜினி.. போயஸ் கார்டனுக்கு விரைந்த தமிழருவி மணியன்.. நேரில் நலம் விசாரிப்பு!

ரஜினியை சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் தமிழருவி மணியன்

Google Oneindia Tamil News

சென்னை: "ஆமா.. அந்த லெட்டரில் இருந்தது உண்மைதான்" என்று தன்னுடைய உடல்நிலையை ரஜினிகாந்த் உறுதி செய்ததை அடுத்து, தமிழருவி மணியன் போயஸ் கார்டனுக்கு சென்று ரஜினியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

நேற்று நாட்களாக ரஜினி பெயரில் போலியான லெட்டர் ஒன்று சோஷியல் மீடியாவில் உலா வந்த நிலையில், நேற்று அந்த செய்தியை ரஜினிகாந்த் மறுத்திருந்தார்.. மேலும், அந்த லெட்டரில் சொல்லி உள்ளபடி, உடல்நிலை பற்றின விஷயங்கள் எல்லாம் உண்மை தான் என்றும், தன் அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து, மக்களுக்கு தெரிவிப்பேன் என்றும் தெளிவுபடுத்தி இருந்தார்.

 Tamilaruvi Manian visits Rajinikanth

இதையடுத்து, ரஜினி இப்போதைக்கு அரசியலுக்கு வருவது டவுட் என்பது போல சோஷியல் மீடியாவில் கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.. அதேசமயம், விசிக தலைவர் திருமாவளவன், பாஜக குஷ்பு உட்பட பலரும் உடல்நிலையை கவனித்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொண்டிருந்தனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் சந்தித்து பேசினார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.. அப்போது ரஜினியின் உடல்நிலை குறித்து தமிழருவி மணியன் கேட்டறிந்ததாக சொல்லப்படுகிறது.

படார்னு பாயை சுருட்டிக் கொண்டு கிளம்பிய ரஜினி.. சுருட்டி வாரிப் போட்ட பாஜக.. அப்ப பாமக கதி?! படார்னு பாயை சுருட்டிக் கொண்டு கிளம்பிய ரஜினி.. சுருட்டி வாரிப் போட்ட பாஜக.. அப்ப பாமக கதி?!

ரஜினி மீது ஆழ்ந்த நம்பிக்கையும், அளவுக்கதிகமான பாசமும், மதிப்பும் வைத்திருப்பவர் தமிழருவி மணியன்.. ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து அவரை விட தமிழருவி மணியன்தான் அதிக முறை பேசி வருபவர்.. தற்போது ரஜினியை வீட்டில் சந்தித்த பேசியது முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாகவே கருதப்படுகிறது.

English summary
Tamilaruvi Manian visits Rajinikanth
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X