சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்திற்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்குமா? தமிழிசை சொன்ன பதில் இதுதான்!

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு இடம் கிடைக்குமா என்ற கேள்விக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுக - பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து லோக்சபா தேர்தலை எதிர்கொண்டது. இதில் அந்த கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

அதிமுக - பாஜக மெகா கூட்டணிக்கு தமிழகத்தில் ஒரே ஒரு இடம் தான் கிடைத்தது. அதிமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார்தான் அந்த மெகா கூட்டணியின் ஒரே எம்பி.

கார்த்திக்கு சீட்டு கொடுக்காவிட்டால்.. நான் இதை செய்வேன்.. சோனியாவையே மிரட்டி சாதித்த ப.சிதம்பரம் கார்த்திக்கு சீட்டு கொடுக்காவிட்டால்.. நான் இதை செய்வேன்.. சோனியாவையே மிரட்டி சாதித்த ப.சிதம்பரம்

தமிழிசை

தமிழிசை

ஓபி ரவீந்திரநாத் எம்பியாக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழிசை பதில்

தமிழிசை பதில்

அப்போது மோடியின் மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு இடம் கிடைக்குமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழிசை தமிழகம் எப்போதும் புறக்கணிப்படாது என்றார். மேலும் அவர் பேசியதாவது, தமிழகத்தின் மீது பாஜகவுக்கு அதிக அக்கறை உள்ளது.

மதிக்கிறோம்

மதிக்கிறோம்

தமிழகத்திற்கு பல நலத்திட்டங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். தமிழக மக்களை நாங்கள் என்றும் மதிக்கிறோம். தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம். தூத்துக்குடி மக்களுக்கு என்றுமே நன்றியுடன் இருப்பேன்.

பெரிய பட்டியல்

பெரிய பட்டியல்

நடிகர் கமல்ஹாசனுக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கும் தமிழிசை பதிலளித்தார். மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழகத்தில் பலருகுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதுபெரும் பட்டியல். ஒவ்வொரு பெயராக குறிப்பிட முடியாது என்றும் தமிழிசை தெரிவித்தார்.

English summary
Tamilisai answered for Tamil Nadu's presence in the Union Cabinet. ADMK - BJP alliance got only one MP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X