சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உங்கள் கனவுக்காக மோடியை உதவ அழைப்பது ஏன்?- ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    Tamilisai Press meet | ஆஹா தமிழிசையின் படாபட் பேச்சு- வீடியோ

    சென்னை: ஸ்டாலின் முதல்வர் கனவு பலிக்க மோடியை உதவ அழைப்பது ஏன் என தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    வேலூருக்கு வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக சார்பில் கதிர்ஆனந்தும், அதிமுக சார்பில் ஏசி சண்முகமும் போட்டியிடுகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் முதல் கதிர்ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் பிரசாரம் செய்து வந்தார். அப்போது மோடியையும் ஜெயலலிதாவையும் ஸ்டாலின் பாராட்டி பேசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காலில் விழுந்த

    காலில் விழுந்த

    ஸ்டாலின் கூறுகையில் கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது போல் தமிழகத்திலும் ஏற்படலாம். அது மோடி நினைத்தால் நடக்கும். எடப்பாடி பழனிச்சாமியும் ஓஎஸ்ஸும் மோடியின் காலில் விழுந்து கிடக்கிறார்கள்.

    ஜெயலலிதா

    ஜெயலலிதா

    கருணாநிதியும் ஜெயலலிதாவும் இருந்த வரை நீட் தமிழகத்தில் நுழையவே இல்லை. ஜெயலலிதா சர்வாதிகார போக்கை கொண்டிருந்தாலும் ஒரு நாளும் தமிழர் நலனை விட்டு கொடுத்ததில்லை என ஸ்டாலின் தெரிவித்தார்.

    தமிழகத்தில் நடக்கும்

    தமிழகத்தில் நடக்கும்

    இதுகுறித்து தமிழிசை சவுந்திரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் மோடி நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஆட்சிமாறும்! கர்நாடக போல தமிழ்நாட்டிலும் நடக்கும் என்கிறார் ஸ்டாலின்.

    விரக்தியின் வெளிப்பாடு

    பலமுறை ஆட்சி மாறும் எனக் கூறி ஏமாந்த ஸ்டாலின், சமீபத்தில் எம்ஜிஆர் தொண்டர்களை திமுகவிற்கு வர வேண்டி அழைத்தார். தன்கனவுக்காக பாரதப்பிரதமரை உதவ அழைப்பது ஏன்? விரக்தியின்வெளிப்பாடு? என தமிழிசை தெரிவித்துள்ளார்.

    English summary
    BJP State President Tamilisai asks Stalin why he asks help from Modi for fulfilling his dream to become as Tamilnadu Chief Minister dream.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X