சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எந்த 7 பேர்.. தமிழிசைக்கு ரஜினிகாந்த் மேல இவ்வளவு நம்பிக்கையா! என்ன சொல்றாங்க பாருங்க!

நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆதரவு அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழிசைக்கு ரஜினிகாந்த் மேல இவ்வளவு நம்பிக்கையா!- வீடியோ

    சென்னை: நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆதரவு அளித்துள்ளார்.

    நேற்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அதில் அவரிடம் ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றிருக்கும் 7 தமிழர்களின் விடுதலை குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர் , யார் அந்த 7 பேர். 7 பேரின் விடுதலை குறித்து எனக்கு தெரியாது. அதுகுறித்து இப்போதுதான் கேள்விப்படுகிறேன், என்று கூறியுள்ளார்.

    Tamilisai comes to rescue Rajinikanth after his comment on Rajiv murder convicts

    [7 பேரா? எந்த 7 பேர்.. ஒரே பேட்டி.. மொத்தமும் க்ளோஸ்.. நீங்க அமெரிக்காவுக்கே போயிடுங்க சிவாஜி! ]

    அவரின் இந்த கருத்து பெரிய விவாதத்தை உருவாக்கியது. பலர் ரஜினிக்கு எதிராக இதனால் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் இந்த வைரல் பேட்டி குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். ரஜினிக்கு ஆதரவாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

    அதில், மீண்டும் ரஜினியிடம் அதே கேள்வியை கேட்டு இருக்க வேண்டும். ரஜினியிடம் மீண்டும் கேள்வி கேட்க இருந்தால் வேறு பதில் வந்திருக்கும்.

    முதல்முறை ரஜினி சரியாக கேள்வியை உள்வாங்கி இருக்க மாட்டார். அவருக்கு கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்து இருக்காது என்று நம்பிக்கையுடன் கருத்து தெரிவித்துள்ளார்.

    English summary
    TN state BJP Cheif Tamilisai Soundararajan comes to rescue Rajinikanth after his comment on Rajiv murder convicts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X