சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Yoga: தன்ஷிகாவுக்கு கடும் டஃப் கொடுத்த தமிழிசை.. செங்கோட்டையனும் விடலையே...!

Google Oneindia Tamil News

Recommended Video

    Yoga Day 2019: யோகா மதம் சார்ந்தது அல்ல.. மனிதம் சார்ந்தது- சர்வதேச யோகா தினத்தில் தமிழிசை- வீடியோ

    சென்னை: உடலுக்கு மனதுக்கு உற்சாகம் தரும் உடற்பயிற்சியான யோகா ஆசானங்களை பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திராஜன், சிறப்பாக செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் யோகா என்றால் இப்படித்தான் செய்ய வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

    உடலுக்கு மனதுக்கு உற்சாகம் தரும் உடற்பயிற்சி யோகா. யோகா ஆசனங்களை யாரெல்லாம் சிறப்பாக செய்கிறார்களோ அவர்களுக்கு உடல் ரீதியான பிரச்னைகள் ஏற்படும் மிகவும் குறைவாக இருக்கும் என்பது அனைவரின் கருத்து. இதுமட்டுமின்றி மனரீதியாகவும் யோகா ஆற்றலை தரும்.

    எனவே யோகா ஆசானங்களை குழந்தைள் முதல் அனைவரும் செய்ய வேண்டும். உலகமே யோகாவை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஆண்டு தோறும் ஜுன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த யோகாவை இந்தியா உலகுக்கு கொடையாக அளித்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்து இருந்தார்.

    பள்ளிக்கல்வித்துறை

    பள்ளிக்கல்வித்துறை

    13 ஆயிரம் ஆசிரியர்கள்இப்படி பெருமை மிக்க யோகாவை அனைத்து வாரத்தில் ஒரு நாள் பள்ளிகளிலும் கட்டாயமாக்கும் முடிவினை தமிழக பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ளது. இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இதற்காக பள்ளிகளில் 13 ஆயிரம் யோகா ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள் என்றும் கூறினார்.

    அமைச்சர் பங்கேற்பு

    அமைச்சர் பங்கேற்பு

    சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று யோகா நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இந்த தகவலை தெரிவித்தார்.

    மாணவர்கள் பங்கேற்பு

    மாணவர்கள் பங்கேற்பு

    இந்த நிகழ்ச்சியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என பலர் கலந்து கொண்டனர். பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், நடிகை தன்ஷிகா உள்ளிட்டோரும் பங்கேற்று யோகாசனம் செய்தனர்.

    தமிழிசை-தன்ஷிகா-செங்கோட்டையன்

    தமிழிசை-தன்ஷிகா-செங்கோட்டையன்

    இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விஷயம என்றால் செங்கோட்டையன், தமிழிசை மற்றும் நடிகை தன்ஷிகா ஆகியோர் ஆர்வமுடன் யோகா செய்தது தான். குறிப்பாக தமிழிசை மிகுந்த ஆர்வமுடன் யோகாசானம் செய்து அங்கிருந்த மக்களை கவர்ந்தார். மருத்துவரான தமிழிசை சவந்திரராஜன் மட்டுமில்லாமல், நடிகை தன்ஷிகாவும் யோகாசனங்களை அற்புதமாக செய்தார். இவர்களுக்கு போட்டி அளிக்கும்வகையில் செங்கோட்டையனும் யோகா செய்தார்.

    நெட்டிசன்கள் பாராட்டு

    நெட்டிசன்கள் பாராட்டு

    இந்த மூன்று பேரும் யோகா செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள், தமிழிசை அக்கா என்னம்மா யோகா செய்றாங்க, யோகா என்றால் இப்படித்தான் செய்ய வேண்டும் என பாராட்டி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    பிரதமர் மோடிக்கு நன்றி

    பிரதமர் மோடிக்கு நன்றி

    இதனிடையே யோகா நிகழ்ச்சிகு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழிசை சவுந்திரராஜன், சர்வதேச யோகா தினம் அறிவித்ததுக்காக பிரதமர்மோடிக்கு நெஞ்சார்ந்த நன்றி. யோகா ஆசானங்களை இஸ்லாமிய நாடுகள் உள்பட பல நாடுகள் செய்துவருகின்றன. யோகா மனதுக்கும் உடலுக்கும் ஒரே நேரத்தில் வலிமைதருவது. உடலில் நோயக்ளை தடுக்கவல்லது. வந்த நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையது. 21ம் தேதி மட்டுமல்ல, வருடம் முழுவதும் பின்பற்றி, அனைவரும் உடல் நலத்தை பேண வேண்டும். சில யோகாகங்கள் மதம்சார்ந்து இருப்பதாக நினைக்கிறார்கள். இது மதம் சார்ந்தது அல்ல. மனிதம் சார்ந்தது. உடல் நலம் பேண நம் தேசம் அளித்த மாபெரும் கலை"இவ்வாறு கூறினார்.

    English summary
    international yoga function at chennai : tamilisai , dhansika and senkottaiyan with tight competition for doing yoga. after tamilisai says thanks to pm modi for announced international yoga day
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X