சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தலைநகரில் தமிழனுக்கு தலைகுனிவு.. கார்த்தி சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட் அட்வைஸ்.. தமிழிசை ஹேப்பி!

Google Oneindia Tamil News

Recommended Video

    Karthy Chidambaram: சுப்ரீம்கோர்ட் சொன்னது நல்ல அட்வைஸ்தான் - கார்த்தி சிதம்பரம்- வீடியோ

    சென்னை: பிணைத்தொகையை திருப்பிக்கேட்ட கார்த்தி சிதம்பரத்தை தொகுதி பணியில் கவனம் செலுத்துமாறு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியதை நல்ல தீர்ப்பு என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றுள்ளார்.

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது மத்திய அமைச்சராக பதவி வகித்த ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்கள் ஆதாயம் பெற்றதாகவும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

    இதேபோல் ஏர்செல் மேக்ஸிஸ் தொடர்பான வழக்குகளும் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் கைதாகாமல் இருக்க ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் வாங்கி வருகின்றனர்.

    மக்களால் தேர்வு செய்யப்படாமல் மத்திய அமைச்சர் ஆனவர்களின் பட்டியல் இதோ... மக்களால் தேர்வு செய்யப்படாமல் மத்திய அமைச்சர் ஆனவர்களின் பட்டியல் இதோ...

    வெளிநாடு பயணம்

    வெளிநாடு பயணம்

    இந்நிலையில் வெளிநாடு பயணம் செல்ல கார்த்தி சிதம்பரம் அண்மையில் உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்தியிருந்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 10 கோடி ரூபாயை பிணைத்தொகையாக செலுத்தினால் வெளிநாடு செல்லலாம் என உத்தரவிட்டிருந்தது. அதைப் போல அவரும் பணத்தை செலுத்திவிட்டு வெளிநாடு சென்று வந்தார்.

    சுப்ரீம்கோர்ட் அட்வைஸ்

    சுப்ரீம்கோர்ட் அட்வைஸ்

    தற்போது ஏற்கனவே செலுத்திய 10 கோடி ரூபாயை திருப்பி அளிக்கும்படி கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம் பிணைத்தொகையை திருப்பிக்கேட்ட மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் தங்களை எம்பியாக தேர்வு செய்துள்ள மக்களவை தொகுதியை கவனியுங்கள் என அறிவுரை கூறியிருந்தது. இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.

    தமிழனுக்கு தலைகுனிவு

    இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ் செய்ததை செய்தியை தமிழக பாஜக தலைவரான தமிழிசை தனது டிவிட்டர் பக்கத்தில் மேற்கோள் காட்டி கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தலைநகரில் தமிழனுக்கு தலைகுனிவு.. தலையில் குட்டிய நல்ல தீர்ப்பு.. வரவேற்போமாக.. என பதிவிட்டுள்ளார்.

    தமிழிசை ஹேப்பி

    தமிழிசை ஹேப்பி

    பாஜகவின் பிரதான எதிர்க்கட்சி காங்கிரஸ் தான். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி பாஜகவை படு பாதாளத்தில் தள்ளியது. பாஜகவுக்கு எதிராக திமுக காங்கிரஸ் எதிர்கொண்ட பிரச்சாரமே இதற்கு காரணம் என குற்றம்சாட்டி வருகின்றனர் தமிழக பாஜக நிர்வாகிகள். இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் கார்த்தி சிதம்பரத்திற்கு அட்வைஸ் செய்ததை தலைநகரில் தமிழனுக்கு தலை குனிவு என கூறிய தமிழிசை நல்ல தீர்ப்பு, வரவேற்போம் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

    English summary
    Tamilisai happy with the advise of Supreme court to Karthy Chidambaram.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X