சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தமுறை அமைச்சர் அல்ல.. தலைவர்.. வருகிறார் நிர்மலா சீதாராமன்.. தமிழிசை பதவி காலியாகிறதா?

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விரைவில் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழிசை சவுந்தரராஜனை பழிதீர்த்துக் கொண்ட பாஜக சீனியர்கள்

    சென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விரைவில் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

    லோக்சபா தேர்தலில் நாடு முழுக்க பாஜக மிகப்பெரிய வெற்றியை சுவைத்து இருக்கிறது. பாஜகவே நினைக்காத அளவிற்கு அக்கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

    நாடு முழுக்க பாஜக மட்டும் தனியாக 303 இடங்களில் வென்றுள்ளது. பாஜக அக்கூட்டணி 363 இடங்களில் வென்று சாதனை படைத்துள்ளது.

    அமேதி தோல்வி எதிரொலி: காங். தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்? அமேதி தோல்வி எதிரொலி: காங். தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்?

    ஆனால் தமிழகம்

    ஆனால் தமிழகம்

    ஆனால் தமிழகத்தில் பாஜக கூட்டணி பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட 5 இடங்களிலும் தோல்வி அடைந்துள்ளது. அதோடு, பாஜகவின் கூட்டணியான அதிமுக, பாமக என்று எல்லா கட்சிகளும் மிக மோசமான தோல்வியை தழுவி இருக்கிறது.

    மிக மோசமான தோல்வி

    மிக மோசமான தோல்வி

    மிக முக்கியமாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தான் போட்டியிட்ட தூத்துக்குடியில் மோசமான தோல்வியை தழுவி இருக்கிறார். இதனால் தமிழக பாஜக தலைமை விரைவில் மாற்றப்பட உள்ளது. ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் பதவிக் கால முடிந்து, அது நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் பதவியை நீட்டிக்கும் எண்ணத்தில் பாஜக தலைமை இல்லை என்கிறார்கள்.

    யார்

    யார்

    இந்த முறை நிர்மலா சீதாராமனுக்கு பாஜக கட்சி அமைச்சர் பொறுப்பு வழங்க வாய்ப்பில்லை என்கிறார்கள். ரபேல் வழக்கில் சிக்கியதால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, கட்சி பொறுப்பை கொடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த முறை அவருக்கு தமிழக பாஜக தலைவர் பொறுப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்னும் சிலர்

    இன்னும் சிலர்

    அதே சமயம் தமிழக பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் பதவி காலியாகி இருப்பதால், அவருக்கும் பாஜகவில் ஏதாவது பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறுகிறார்கள். இன்னும் சிபி ராதாகிருஷ்ணன். எச். ராஜா உள்ளிட்ட தலைவர்களும் தலைவர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

    English summary
    Tamilisai may lose her TN BJP chief post after the loss in Lok Sabha elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X