சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி?.. தமிழிசை பதில்

Google Oneindia Tamil News

Recommended Video

    Tamilisai Soundararajan : ஏன் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என தமிழக மக்கள் உணர்வார்கள்-தமிழிசை-வீடியோ

    சென்னை: தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பதில் அளித்துள்ளார்.

    நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக, பாமக, புதிய நீதி கட்சி, தமாகா, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து தேர்தலை சந்தித்தன. இதில் வேலூர் தொகுதியில் புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

    Tamilisai replies whether OPS son gets minister post?

    அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளும் பிளாப் ஆனது. அதிமுகவில் கூட ஓபிஎஸ் மகனை தவிர்த்து மற்றவர்கள் எல்லாம் தோல்வியுற்றனர்.

    இந்த நிலையில் தேர்தலுக்கு முன்பே தனது மகனுக்கு அமைச்சர் பதவிக்கு ஓபிஎஸ் அடிபோட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதற்காக காவி உடை அணிந்து கொண்டு தந்தையும் மகனும் டெல்லியையே வலம் வந்தனர்.

     மம்தாவுக்கு சிங்கிள் ஷாக்.. கேசிஆருக்கு டபுள் ஷாக்! அடிச்சு தூக்கி 'பாஜக' ஆதிக்கம் மம்தாவுக்கு சிங்கிள் ஷாக்.. கேசிஆருக்கு டபுள் ஷாக்! அடிச்சு தூக்கி 'பாஜக' ஆதிக்கம்

    இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்பதை பிரதமர்தான் முடிவு செய்வார்.

    தமிழகத்தில் பாஜகவின் பின்னடைவு ஒரு தற்காலிகமானது. அதை விரைவில் சரி செய்வோம் என்றார் தமிழிசை.

    English summary
    BJP State President Tamilisai Soundararajan says that PM Narendra Modi decides whether OPS son Raveendranath Kumar will be induced in Cabinet or not.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X