சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாதியம் பேசி சாதிக்க நினைப்பவர்கள் யார்? மக்களுக்கு தெரியும்.. திருமாவை வெளுத்து வாங்கிய தமிழிசை!

Google Oneindia Tamil News

Recommended Video

    சாதியம் பேசி சாதிக்க நினைப்பவர்கள் யார்? திருமாவை வெளுத்து வாங்கிய தமிழிசை

    சென்னை: சாதியம் பேசி சாதிக்க நினைப்பவர்கள் யார் என திருமாவளவனுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

    கடந்த 23ஆம் தேதி நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாயின. இந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமருகிறது.

    இந்நிலையில் நிடைபெற்ற மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மோடி அரசு மதவாத அரசு என்றும் பாஜக வெற்றியால் சிறுபான்மையினர் அச்சத்தில் உள்ளனர் என குற்றம்சாட்டினார்.

    மகாராஷ்டிரா கொலை

    மகாராஷ்டிரா கொலை

    இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டிவிட்டர் வாயிலாக திருமாவளவனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக கடந்த 23ஆம் தேதி மகாராஷ்டிராவில் பாஜகவின் வெற்றியை கொண்டாடி பாஜக தொண்டர் அடித்துக்கொலை செய்யப்பட்டதையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

    விளாசிய தமிழிசை

    விளாசிய தமிழிசை

    மேலும் இந்த கொலை சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை குறிப்பிட்ட தமிழிசை திருமாவளவனுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பி விளாசியுள்ளார்.

    திருமா பார்வைக்கு

    திருமா பார்வைக்கு

    இதுதொடர்பாக் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழிசை கூறியிருப்பதாவது, மோடி அரசு மதவாத அரசு! மோடியின் வெற்றியால் சிறுபான்மையினர் அச்சத்தில் உள்ளனர் என்று குற்றச்சாட்டு கூறும் விசிக தலைவர் திருமா பார்வைக்கு என்று கூறி, பதில் வருமா என கேட்டுள்ளார்.

    துண்டாட துடிப்பது யார்?

    துண்டாட துடிப்பது யார்?

    மேலும் தூண்டுவது யார்? துண்டாட துடிப்பது யார்? சாதியம் பேசி சாதிக்க நினைப்பவர்கள் யார்?யார்?மக்கள் அறிவார்கள் என்றும் தமிழிசை தனது டிவிட்டில் காட்டமாக கூறியுள்ளார்.

    English summary
    Tamilnadu BJP leader Tamilisai slams VCK leader Thirumavalavan for accusing Modi Government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X