• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இருக்கிறதே இரண்டு இலைதான்.. ஒன்றில் முதல்வர்.. இன்னொன்றில் தமிழிசை.. ஆரத்தியில் இது வேற லெவல்!

|

சென்னை: சுத்தம்.. இருக்கிறதே இரண்டு இலைதான்.. அதில ஒரு இலையில் முதல்வர், இன்னொரு இலையில் தமிழிசை! இப்படித்தான் அந்த ஆரத்தி தட்டை நீட்டி தமிழிசையை வரவேற்றனர் தொகுதி மக்கள்!

தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் தினம் ஒரு இடத்திற்கு சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது அவருக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பினை தந்து வருகிறார்கள்.

தமிழிசையை நேரில் பார்த்ததும் தங்கள் அன்பினை விதவிதமாக பொழிந்து விடுகிறார்கள். தனது ட்வீட்டில் போட்டோக்களோடு இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை தினமும் பதிவிட்டு வருகிறார் தமிழிசை.

EXCLUSIVE: 20 வருடமாக.. பரமக்குடி சண்முகவள்ளி கடையில் மட்டும் கூட்டம் கட்டி ஏறுவது ஏன்?

வாழ்த்துக்கள்

அதில், நேற்றுகூட ஒரு ட்வீட்டில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி ஆழ்வை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிக்கும்போது மக்களின் வரவேற்பும்... வாழ்த்துக்களும்..." என்று பதிவிட்டு சில போட்டோக்களை போட்டுள்ளார்.

ஆரஞ்சு கலர்

ஆரஞ்சு கலர்

அதில் பெண்கள் தமிழிசையை ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள். இதில் இந்த ஆரத்தி தட்டுதான் ஸ்பெஷல்! ஒரு சில்வர் தட்டு.. அதில் வெள்ளை ஆரஞ்சு கலர் அதாவது காவி கலர் தாமரை உள்ளது. வழக்கம்போல் இரட்டை இலை பச்சை கலரில் உள்ளது. ஆக.. பார்ப்பதற்கு பாஜக-அதிமுக என்று பளிச்சென தெரிகிறது.

தமிழிசை போட்டோ

தமிழிசை போட்டோ

இன்னொரு ஆரத்தி தட்டு அதைவிட ஸ்பெஷல்! அதில் இரண்டு பெரிய இலைகளை வைத்து விட்டார்கள். அதில் ஒரு இலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டோ, இன்னொரு இலையில் தமிழிசையின் போட்டோ உள்ளது.

முதல்வர்

முதல்வர்

அதாவது இரட்டை இலையில் தமிழிசைக்கு ஒரு இலை, எடப்பாடிக்கு ஒரு இலை! கூட்டணியில் மிச்சம் இருப்பவர்கள் நிலை என்ன என தெரியவில்லை! எப்படியோ.. ஆரத்தியை உலக வரலாற்றுக்கே கொண்டு சென்றுவிட்ட பெருமை தூத்துக்குடி தாய்க்குலங்களைத்தான் போய் சேரும்!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

வட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
வருடம்
வேட்பாளர் பெயர் கட்சி லெவல் வாக்குகள் வாக்கு சதவீதம் வெற்றி வித்தியாசம்
2019
டாக்டர். கலாநிதி வீராசாமி, திமுக வென்றவர் 5,90,986 62% 4,61,518
ஆர். மோகன்ராஜ் தேமுதிக தோற்றவர் 1,29,468 14% 4,61,518
2014
வெங்கடேஷ் பாபு டி.ஜி அஇஅதிமுக வென்றவர் 4,06,704 46% 99,704
கிரிராஜன். ஆர் திமுக தோற்றவர் 3,07,000 34% 0
2009
இளங்கோவன் டி.கெ.எஸ் திமுக வென்றவர் 2,81,055 43% 19,153
பாண்டியன். டி சிபிஐ தோற்றவர் 2,61,902 40% 0

 
 
 
English summary
Aazhvai Village People gives warm welcome to Tamilisai Soundarajan campaigned in Thoothukudi Constitution

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more