சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுட்டு போட்டால் மலராது.. ஆனா மக்கள் ஓட்டு போட்டால் தாமரை மலரும்.. ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுகவை கூட்டணிக்கு யார் கூப்பிட்டது?-தமிழிசை-வீடியோ

    சென்னை: சுட்டு போட்டாலும் தமிழகத்தில் தாமரை மலராது என்ற ஸ்டாலினின் கருத்துக்கு பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

    தமிழகத்தில் கிராம சபை கூட்டங்களை திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வருகிறார். அந்த கூட்டத்தில் சுட்டு போட்டாலும் தாமரை மலராது என்ற கருத்தை முன் வைத்துள்ளார்.

    இதற்கு சென்னையில் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் சுட்டு போட்டால் தாமரை மலராது. ஆனால் மக்கள் ஓட்டு போட்டால் தாமரை மலரும்.

    ஆதரிப்போருக்கு

    ஆதரிப்போருக்கு

    கட்டாயப்படுத்தி இந்தியை புகுத்தும் நோக்கம் பாஜகவுக்கு இல்லை. 10 சதவீதம் இடஒதுக்கீடு என்பது சமூகத்தில் நலிந்த மக்கள் மட்டுமே. பாஜக கூட்டணியில் மோடியின் கொள்கைளை மதிப்போருக்கும் திட்டங்களை ஆதரிப்போருக்கும் எப்போதும் இடம் உண்டு.

    எதிர் கூட்டணி

    எதிர் கூட்டணி

    அதன்படி ஏற்கெனவே கூட்டணியில் இருந்தவர்கள் மீண்டும் கூட்டணி அமைக்கவும், இல்லாதவர்கள் புதிய கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளது. எதிர் கூட்டணியில் இல்லாதவர்கள் பாஜக கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது.

    இணைவார்கள்

    இணைவார்கள்

    தமிழக மக்களை பாதிக்கும் வகையில் எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு அனுமதிக்காது, மோடியை பிரமராக்க உழைப்பவர்கள் எங்கள் கூட்டணியில் இணைவார்கள் என்றார் தமிழிசை.

    ஸ்டாலின் நாடகம்

    ஸ்டாலின் நாடகம்

    இது மட்டுமில்லாமல் தமிழிசை தனது டுவிட்டரிலும் ஸ்டாலினை விமர்சனம் செய்துள்ளார். அதில் அவர் கூறுகையில் கிராமசபைக்கூட்டம் பெயரில் நாடகசபை கூட்டம் அரங்கேற்றம்! ஒற்றையாக அமர்ந்து ஓரங்க நாடகம்? வரும் காலத்தில் ஓரங்கட்டப்படுவோம் என்பதன் அறிகுறி? 5 முறை ஆண்ட திமுக! ஊழல்ஆட்சி! குடும்ப ஆட்சி! மறக்க முடியுமா? உரக்கச் சொல்வோம்! ஏமாற்ற வருகிறார்கள்! ஏமாறாதீர் என எடுத்து சொல்வோம்! வெல்வோம்!" என்று பதிவிட்டுள்ளார்.

    English summary
    BJP President Tamilisai Soundararajan says that Lotus can blossom when people cast their votes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X