சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அங்கே அலறடிப்பது இருக்கட்டும்.. இங்கே தமிழகம் அலறுதே.. திமுக மீது பாய்ந்த தமிழிசை

திமுகவின் வன்முறை குறித்து தமிழிசை சவுந்தராஜன் ட்வீட் போட்டுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    'கொலை செய்துட்டு, குளிச்சுட்டுதான் கிளம்புனேன், நான் ஒரு சைக்கோ..' ஷாக் தந்த கார்த்திகேயன்

    சென்னை: "பாராளுமன்றத்தை திமுக உறுப்பினர்கள் அலறடிப்பது இருக்கட்டும்.- இங்கே திமுகவினரின் அடுத்தடுத்த கொலையால் தென்னகமே அலறி கொண்டிருக்கிறது" என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

    சென்ற வாரம் நெல்லை முன்னாள்மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது பாஜக தரப்பில் இதற்கு எந்த வித கருத்தோ, வருத்தமோ சொல்லவே இல்லை.

    Tamilisai Soundarajan says about DMKs Violence

    ஆனால் கொலை நடந்த 2 நாளிலேயே திமுக பெண் நிர்வாகி இந்த கொலையில் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்ற யூகங்கள் வெளிவந்தன. யூகம் உண்மையாவதற்கு முன்பேயே, போலீசார் முழுசா விசாரிப்பதற்கு முன்பேயே எச். ராஜா, "உமா மகேஸ்வரி கொலை சம்பவம் பெரிசா வெடிக்கும் போலயே" என்று ட்வீட்டில் கவலை தெரிவித்திருந்தார்.

    இப்போது, திமுக பெண் நிர்வாகியின் மகன்தான் கொலையை செய்தது என்று நிரூபணம் ஆகி உள்ள நிலையில், தமிழிசை கருத்து சொல்லி உள்ளார். தன்னுடைய ட்வீட்டில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

    "பாராளுமன்றத்தை திமுக உறுப்பினர்கள் அலறடித்துக் கொண்டிருக்கிறார்கள் - ஸ்டாலின் பெருமிதம் இங்கே ...தென்தமிழ்நாட்டில் அடுத்தடுத்த கொலைகள் திமுகவினரால் என தென்னகமே அலறிக் கொண்டிருக்கிறது தன்மானம் இனமானம் பேசிய திமுக இன்று சன்மானத்தால் ஓட்டுமட்டுமல்ல உயிரையும் வாங்கலாம் என நிரூபணமாகிறதா?" என்று பதிவிட்டுள்ளார்.

    பொதுவாக, கொலையோ, வன்முறை சம்பவமோ, எதுவானாலும், அவை கட்சியை பார்த்து நிகழ்வதில்லை, தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உணர்வுகளின் அடிப்படையில் நடக்கக்கூடிய துர்சம்பவங்களே! இருந்தாலும் உமாமகேஸ்வரி விஷயத்தில், அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்ட கொலை என்பதால், நிச்சயம் திமுகவுக்கு இது ஒரு கருப்பு புள்ளிதான். அதே சமயம், உ.பியில் உன்னாவோ பாலியல் வழக்கு உட்பட எத்தனையோ பாலியல் சம்பவங்களுக்கு பாஜகவின் சிலர் காரணமாக இருந்து வருகிறார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது.

    English summary
    BJP State President Tamilisai Soundarajan has criticized Nellai Ex Mayor murder issue and dmks violence
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X