சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக பேசுவதாக தமிழிசை சொன்னார்.. பொன்முடியும் மறுத்து விட்டார்.. அதிமுக கம்முன்னு இருக்கே!

பாஜக - திமுக பேச்சுவார்த்தை என்று சொன்ன தமிழிசைக்கு அதிமுக அளிக்காதது ஏன்?

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜகவுடன் திமுக பேசியதாக தமிழிசை சொன்னதுக்கு பொன்முடி விளக்கம்- வீடியோ

    சென்னை: திமுக பாஜகவுடன் பேசிக் கொண்டிருக்கிறது. .. இதுதான் தமிழிசை இன்று காலையில் போட்ட குண்டு. ஆனால் குண்டு போட்ட வேகத்திலேயே அதைத் தண்ணீர் ஊற்றி அணைத்து விட்டது திமுக. இங்கு நமக்கு ஒரு கேள்வி எழுகிறது.

    அதாவது தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக கூட்டணிக்கு தலைமை அதிமுகதான். என்னதான் அதிமுக தலைமை இல்லை என்று பாஜகவினர் கருதினாலும் கூட அதிமுகவை வைத்துத்தான் இங்கு பாஜக தேர்தலையே சந்தித்தது. அப்படி இருக்க, பாஜகவுடன் திமுக பேசுவது குறித்து முதலில் அதிமுகவுக்குத்தான் கோபம் வந்திருக்க வேண்டும்.

    அதிமுகவுக்கு கோபம் வருவதுதான் நியாயமானது. காரணம், அதிமுகவினர் இந்த தேர்தலுக்காக அத்தனை உழைத்துள்ளனர். பணம், பொருள், மனித உழைப்பு என மிகக் கடுமையாக பாடுபட்டுள்ளனர் - பாஜகவுக்கும் சேர்த்தே. எனவே அதிமுகவுக்கு இதில் கேள்வி கேட்க உரிமை உண்டு. ஆனால் அதிமுக கம்மென்று உள்ளது.

    ஒரே சைக்கிளிங், வாக்கிங், ஜாக்கிங், கண்டபடி ஸ்பீக்கிங்.. ஸ்டாலின் மீது விந்தியா தாக்கு! ஒரே சைக்கிளிங், வாக்கிங், ஜாக்கிங், கண்டபடி ஸ்பீக்கிங்.. ஸ்டாலின் மீது விந்தியா தாக்கு!

    அதிமுகவின் நிலை?

    அதிமுகவின் நிலை?

    சரி, பாஜக கூட்டணிக்கு திமுக ஆதரவு தருகிறது என்றே வைத்துக் கொள்வோம். அப்போது அதிமுகவின் நிலை என்ன? அதிமுக எப்படி திமுக இடம் பெற்றுள்ள கூட்டணியில் இருக்க முடியும்? அதை அதிமுகவினர் ஏற்பார்களா? இது பற்றியெல்லாம் அதிமுக கவலைப்பட்டதா, யோசித்ததா என்றும் தெரியவில்லை.

    கூட்டணி தர்மம்

    கூட்டணி தர்மம்

    பாஜகவுடன் திமுக பேசுதோ அல்லது திமுகவை பாஜக அழைத்துக் கொண்டிருக்கிறதோ.. இரண்டுமே ஒன்றுதான். அப்படி இருக்கும் பட்சத்தில், அதாவது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதிமுகவுடன் வைத்த கூட்டணி தர்மத்தை பாஜக மீறி விட்டதாகத்தானே அர்த்தம். அதை எப்படி அதிமுகவினர் அதாவது தொண்டர்கள் ஏற்பார்கள் என்று தெரியவில்லை.

    எப்படி சமாளிக்கும்?

    எப்படி சமாளிக்கும்?

    அதிமுக தலைமை எடுக்கும் எல்லா முடிவுகளையும் அதிமுக தொண்டர்கள் ஏற்பார்களா என்பது அதை விட முக்கியமானது, அதிமுக தலைமையிலான அணியில் இருந்து கொண்டே பாஜக தரப்பு, திமுகவுடன் பேசுவதை அதிமுக தொண்டர்கள் எப்படி ஜீரணிப்பார்கள் என்பதும் உள்ளது. அதை அதிமுக தலைமை எப்படி சமாளிக்கும் என்பதும் கேள்விக்குரியது.

    எப்படி சமாளிக்கும்?

    எப்படி சமாளிக்கும்?

    அதிமுக தலைமை எடுக்கும் எல்லா முடிவுகளையும் அதிமுக தொண்டர்கள் ஏற்பார்களா என்பது அதை விட முக்கியமானது, அதிமுக தலைமையிலான அணியில் இருந்து கொண்டே பாஜக தரப்பு, திமுகவுடன் பேசுவதை அதிமுக தொண்டர்கள் எப்படி ஜீரணிப்பார்கள் என்பதும் உள்ளது. அதை அதிமுக தலைமை எப்படி சமாளிக்கும் என்பதும் கேள்விக்குரியது.

    ஏன் வரவில்லை?

    ஏன் வரவில்லை?

    தேர்தல் இன்னும் முடியவில்லை. அதற்குள்ளேயே இப்படி கூட்டணி தர்மங்கள் மீறப்படுவதும், இஷ்டத்திற்கு கூட்டணிகளை மாற்றுவதும் இந்திய அரசியலில் மிகச் சாதாரணமானதுதான்.. கவுண்டமணி பாஷையில் சொல்வதானால் அரசியலில் இதெல்லாம் சாதாரணப்பாதான். எல்லாம் சரி... ஆனால் திமுகவுக்கு கோபம் வந்த அளவுக்கு அதிமுகவுக்கு கோபம் வரவில்லையே ஏன்?!

    English summary
    Tamilisai Soundarajan says MK Stalin is talking with BJP. But We do not know why the AIADMK did not reply to Tamilisai's comment
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X