சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உண்ணாவிரதம் நாடகம் நடத்தினீங்களே.. ஈழ படுகொலையை தடுக்க முடிந்ததா?.. தமிழிசை பொளேர்!

தபால்துறை தேர்வு ரத்து என்ற அறிவிப்பினை தமிழிசை வரவேற்றுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "உண்ணாவிரத நாடகம் நடத்தினீங்களே.. ராஜினாமா நாடகம் நடத்தினீங்களே.. இலங்கை இனப்படுகொலையை உங்களால் தடுக்க முடிந்ததா?" என்று தமிழிசை சவுந்தராஜன் திமுகவை பார்த்து நறுக்கென கேள்வி கேட்டுள்ளார்.

இவ்வளவு காலம் அஞ்சல் துறை தேர்வுகள் தமிழ் உட்பட 15 பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட்ட நிலையில், இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இதனால் தமிழக மக்கள் அதிர்ச்சி ஆனார்கள். ஏனெனில், நம் மாநிலத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர். தமிழக சட்டமன்றத்தில் இது சம்பந்தமான காரசார விவாதம் பறந்தது. மாநிலங்களவையிலும் இந்த பிரச்சனை எழுப்பப்பட்டு, அவையையே முடக்கிவிட்டனர் திமுக எம்பிக்கள்.

அட இது நல்லா இருக்கே.. பிரியங்கா காந்தியை காங். தலைவராக்க வலுக்கும் ஆதரவுஅட இது நல்லா இருக்கே.. பிரியங்கா காந்தியை காங். தலைவராக்க வலுக்கும் ஆதரவு

ட்வீட்

இவ்வளவு நடந்த பிறகு, அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டு, பிராந்திய மொழிகளில் தேர்வு நடைபெறும் என்று புதிதாக அறிவித்தது மத்திய அரசு. இதற்குதான் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார். வாழ்த்தி பாராட்டி ஒரு ட்வீட்டையும் போட்டு, அதில் முடிந்தவரை திமுகவையும் இழுத்து போட்டு விமர்சித்துள்ளார்.

தபால்துறை

தபால்துறை

தனது ட்வீட்டில், "தபால்துறை தேர்வு ரத்து உங்கள் வெற்றி அல்ல. எங்கள் வெற்றி. மக்கள் கோரிக்கை வந்தவுடன் செவிமடுத்து உடனே செயலாற்றும் அரசு மோடி அரசு. நீங்கள் ஆட்சியில் இருக்கும்போது உண்ணாவிரத நாடகம்/ ராஜினாமா நாடகம் நடத்தியும் இலங்கை இனப்படுகொலையை தடுக்க முடிந்ததா?கூட்டணி காங்.செவிசாய்த்ததா? செயலாற்றியதா?" என்று பதிவிட்டுள்ளார்.

வாபஸ்

வாபஸ்

தமிழிசையின் இந்த பதிவிற்கு திமுக தரப்பு என்ன பதில் சொல்ல போகிறதோ என்று தெரியவில்லை. அது இந்த இரு கட்சிக்கும் சம்பந்தப்பட்ட விஷயம். ஆனால் இவங்களாகவே அதாவது பாஜக அரசே ஒரு பிரச்சனையை எழுப்புவதும், அதை தமிழக மக்கள் மீது திணிப்பதும், பிறகு எதிர்ப்புகளை கண்டவுடன் பின்வாங்கிவிட்டு, அந்த அறிவிப்பை ரத்து செய்வதும், அதற்கு நன்றியும் சொல்லி கொள்வதும் என்றுதான் தற்போதைய நிலை தொடர்ந்து வருகிறது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

அப்படியானால், தமிழகத்தை பாதிக்கக்கூடிய 8 வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வு, போன்றவைகளையும் மக்கள் எதிர்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவைகளை எல்லாம் எப்போது மத்திய அரசு ரத்து செய்யும், அதற்கு எப்போது பாஜக தரப்பு நன்றி சொல்லும் என்ற எதிர்பார்ப்பும் நமக்கு கூடி உள்ளது.

English summary
BJP State President Tamilisai Soundarajan welcomes the Centre cancelled the postal exam and criticized DMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X