சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடைந்தால் திராவிட நாடு.. இல்லையேல் சுடுகாடு.. திமுகவின் தேச பக்தி எங்கே எங்கே.. தமிழிசை காட்டம்

டெல்லியில் திமுக போராட்டம் குறித்து தமிழிசை சவுந்தராஜன் டுவீட் போட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: காஷ்மீரத்தில் ஜனநாயகத்தை பாதுகாக்க, டெல்லிக்கு சென்று திமுக போராட்டம் நடத்துகிறதாம்.. அடைந்தால் திராவிடநாடு, இல்லையேல் சுடுகாடு என்று அன்று சொன்னதை பயந்து கைவிட்ட திமுகவின் தேசபக்தி???..எங்கே?" என்று தமிழிசை சவுந்தராஜான் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

முக ஸ்டாலின் சாதாரணமாக ஒரு கருத்து, ட்வீட் போட்டாலே.. அதற்கு வரிந்து கட்டிக் கொண்டு பதிலடி தந்துவிடுபவர் தமிழக பாஜக தலைவர். இப்போது காஷ்மீர் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது.

காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லி ஜந்தர்மந்தரில் 22-ம் தேதி திமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சி எம்பிக்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

ப.சிதம்பரம் தடம் மாறமாட்டார்.. மத்திய அரசை பாராட்டியதால் உடனே மோடி ஆதரவா?.. கே எஸ் அழகிரி ப.சிதம்பரம் தடம் மாறமாட்டார்.. மத்திய அரசை பாராட்டியதால் உடனே மோடி ஆதரவா?.. கே எஸ் அழகிரி

ட்வீட்

இதற்கு அதிமுக தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. கூட்டணியில் உள்ள அதிமுகவே கருத்து சொல்லும்போது, பாஜக சும்மா இருக்குமா என்ன? திமுகவின் போராட்டம் குறித்து தமிழிசை சவுந்தராஜன் காட்டமான கேள்வி எழுப்பி ட்வீட் போட்டுள்ளார்.

தேசபக்தி எங்கே?

தேசபக்தி எங்கே?

அதில், "காஷ்மீரத்தில் ஜனநாயகத்தை காக்க திமுக தலைவர் டெல்லி சென்று போராட்டமாம்? யாருக்கு ஆதரவாக? தேசவிரோத சக்திகளுக்கு ஆதரவாக ஜனநாயகப்போர்வையில் போராடும் தேசவிரோத திமுக ? அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு? என்று அன்று சொன்னதை பயந்து கைவிட்ட திமுகவின் தேசபக்தி???.. எங்கே ? என தேடுகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

சாணக்கியத்தனம்

சாணக்கியத்தனம்

மிக முக்கிய தலைவர்களான மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா போன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றுதான். எனவே இதற்கு தன் தரப்பு சார்பாக திமுக தெரிவிக்க முயல்வதையும் குறை சொல்ல முடியாது. அது மட்டுமில்லை.. தற்போதைய அரசியலில், குறிப்பாக பாஜகவை எதிர்ப்பதன் மூலம் தமிழகத்தில் தங்கள் பலத்தை அதிகரிக்க திமுக முயல்வதும் அரசியல் சாணக்கியத்தனம் என்றே சொல்ல தோன்றுகிறது.

நியாயம்தான்

நியாயம்தான்

அதேசமயம், 2 லட்சம் ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டபோது, இதே திமுக டெல்லி சென்று ஏன் போராடவில்லை என்ற கேள்வியும் எழவே செய்கிறது. அந்த வகையில், தமிழிசையின் இந்த விமர்சனமும், ட்வீட்டில் கோடிட்டு காட்டிய வார்த்தைகளில் ஓரளவு நியாயம் இருக்கவே செய்கிறது. திமுகவின் முரண்பாடுகளை சுட்டிக் காட்டி தமிழிசை கேட்டுள்ள இந்த கேள்விக்கு திமுக என்ன பதில் சொல்கிறது என்று பார்ப்போம்.

English summary
BJP State President Tamilisai soundarajan tweet about DMKs Delhi Protest about Kashmir Issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X