சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரயில் வராத தண்டவாளத்தில் தலை வைத்து போராடிய வீரர்களாச்சே.. திமுகவை வாரி சுருட்டும் தமிழிசை

திமுக போராட்டம் குறித்து தமிழிசை சவுந்தராஜன் விமர்சித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "அரசியல் சட்டத்தை எரிக்கவில்லை! பேப்பரைத்தான் எரித்தோம்? இந்தியை எதிர்க்கவில்லை இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்.. திமுகவின் வழக்கமான பழைய டயலாக்? நினைவுக்கு வருதே.. ரயில் வராத தண்டவாளத்தில் தலைவைத்து போராடிய வீரர்கள்?" என்று திமுக தலைவர் ஸ்டாலினை கேள்வி கேட்டு, தமிழிசை சவுந்தராஜன் நக்கலாக ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு 70 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த வாரம் நீக்கி நாடாளுமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டது.

Tamilisai Soundarajans tweet about DMK Protest

எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக எதிர்த்தன.. குரல் கொடுத்தன.. கண்டனம் தெரிவித்தன.. ஆனால் போராட்டம் என்று இறங்கியது திமுகதான். இதன் எதிர்ப்பை வெளிப்படுத்தவே டெல்லியில் போராட்டம் நடத்தியது.

இந்நிலையில், நேற்று ஒரு திருமண விழாவில் பேசிய முக ஸ்டாலின் "காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது தவறு என டெல்லியில் போராடவில்லை என்றும், கையாண்ட விதம்தான் தவறு என்றும், முறையாக இந்த சட்ட நீக்கம் அமல்படுத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டவே போராடினோம்" என்று பேசியதாக செய்திகள் வெளிவந்தன. ஸ்டாலினின் இந்த பேச்சைதான் தமிழக பாஜக தலைவர் சரமாரியாக விமர்சித்துள்ளார்.

"ரயில் வராத தண்டவாளத்தில் தலைவைத்து போராடிய வீரர்கள்? 370 பிரிவு ரத்தானதற்கு எதிராக டில்லியில் போராடவில்லை. அதை செயலாக்கிய விதம் சரியில்லை என்றே போராடினோம்..ஸ்டாலின்.. அரசியல் சட்டத்தை எரிக்கவில்லை! பேப்பரைத்தான் எரித்தோம்? இந்தியை எதிர்க்கவில்லை இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்... திமுகவின் வழக்கமான பழைய டயலாக்? நினைவுக்கு வருதே" என்று கிண்டலடித்துள்ளார்.

வழக்கம்போல, தமிழிசையின் ட்வீட்டுக்கு வரவேற்று, எதிர்த்து என மாறி மாறி விமர்சனங்கள் பதிவாகி வருகின்றன. அதில் "எங்களுக்கு உங்களைப்பெத்தவரும் நீங்கள் பெத்தவரும் எதிர்ப்பது நினைவுக்கு வருது மேடம்" என்று ட்விட்டர்வாசிகள் கமெண்ட் போட்டு வருகின்றனர்

English summary
BJP State President Tamilisai Soundarajan has criticized DMK Leader MK Stalins Delhi Protest Speech
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X