சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் தேர்வை மாணவர்களிடமே விட்டுவிடுங்கள்.. எதிர்க்கட்சிகளுக்கு தமிழிசை அறிவுரை

Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வை மாணவர்களிடமே விட்டுவிடுங்கள் என எதிர்க்கட்சியினருக்கு தமிழிசை சவுந்திரராஜன் அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னையை அடுத்த அனகாபுதூர் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவி ஜீவிதா. இவர் 2017-ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வை முடித்தார். 10-ஆம் வகுப்பில் 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-ஆம் இடம் பெற்றார்.

பிளஸ் 2 தேர்வில் 195 கட் ஆப் மதிப்பெண்களை பெற்றார். அந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டதால் மருத்துவர் கனவை நனவாக்க அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். இதையடுத்து தையல் தொழியாளியான அவரது தந்தை கடன் பெற்று தனியார் நீட் பயிற்சி மையத்தில் படிக்க வைத்தனர்.

ஒரே நாளில் மோடி, ராகுல் காந்தி அடுத்தடுத்து விசிட்.. எல்லோர் கண்ணும் கேரளா மீதுதான் ஒரே நாளில் மோடி, ராகுல் காந்தி அடுத்தடுத்து விசிட்.. எல்லோர் கண்ணும் கேரளா மீதுதான்

நீட் தேர்வு

நீட் தேர்வு

2018-ஆம் ஆண்டு நீட் தேர்வில் 361 மதிப்பெண்கள் பெற்றதால் 4 மதிப்பெண்களில் மருத்துவர் கனவு பறிபோனது. இதையடுத்து தனது விடாமுயற்சியால் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். அதில் 605 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

தமிழிசை

தமிழிசை

605 மதிப்பெண்கள் எடுத்துள்ளதால் அவர் விரும்பும் அரசு மருத்துவக் கல்லூரியில் ஜீவிதாவுக்கு இடம் கிடைப்பது உறுதியாகிவிட்டது. ஆனால் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் மாணவியின் குடும்பத்தினர் உள்ளனர். இதையடுத்து அந்த மாணவியின் கல்விக் கட்டணத்தை ஏற்பதாக தமிழிசை சவுந்திரராஜன் ஒப்புக் கொண்டார்.

நீட் தேர்வு

நீட் தேர்வு

இதையடுத்து மாணவியின் வீட்டுக்கு சென்ற தமிழிசை அங்கு மாணவிக்கு பாராட்டு தெரிவித்து முதல் கட்டமாக 50 ஆயிரம் பணத்தை கொடுத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை கூறுகையில் , நீட் தேர்வை மாணவர்களிடம் விட்டு விடுங்கள்.

அவநம்பிக்கை

அவநம்பிக்கை

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவியின் கல்விச் செலவை ஏற்றது விளம்பரத்திற்காக அல்ல. நீட் தேர்வு பற்றி அவநம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகவே எதிர்க்கட்சியினர் பேசிக்கொண்டிருக்கின்றனர். மாணவர்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்தாதீர்கள் என்றார் தமிழிசை.

English summary
BJP President Tamilisai Soundararajan advises opposition parties dont make students disbelief. Let leave Neet Exam decision to students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X