சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீர்னு ஸ்டாலினை ஏன் தமிழிசை சந்தித்தார்.. பாஜக பிளான் என்னவா இருக்கும்.. ஒருவேளை அதுவா??

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு மாநில முதல்வரை, வேற்று மாநில துணை நிலை ஆளுநர் ஏன் சந்தித்தார்? தமிழிசை - முக ஸ்டாலின் சந்திப்பின் பின்னணி என்ன? என்பது குறித்த விவாதங்கள் கிளம்பி உள்ளன.

Recommended Video

    முதல்வர் ஸ்டாலினுடன், தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு

    முதல்வர் முக ஸ்டாலினும் சரி, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் சரி, தங்களது சின்ன வயசில் இருந்தே தமிழக அரசியல் தலைவர்களை நேரில் பார்த்து பார்த்து வளர்ந்தவர்கள்.. இருவருமே பாரம்பரியமான பின்னணி கொண்டவர்கள்..

    பெற்றோர்களின் சீரிய வளர்ப்பு, நாகரீகம் குறையாமல் பேசும் தன்மை, வார்த்தை கட்டுப்பாடுகள், எதையும் பொறுமையுடன் அணுகும் பின்னணி.. இதுதான் இவர்கள் இருவரின் பிளஸ் பாயிண்ட்டாக இருந்து வருகிறது.

    கருணாநிதி மறைவுக்கு பிறகு, ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்ற போது, இங்கு ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தராஜனுடன் நிறைய கருத்து மோதல்கள் ஏற்பட்டது..

    முதல்வர் ஸ்டாலினுடன், தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு.. முதல்வர் முகத்தில் புன்னகையை பாருங்க! முதல்வர் ஸ்டாலினுடன், தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு.. முதல்வர் முகத்தில் புன்னகையை பாருங்க!

     அரசியல் மோதல்

    அரசியல் மோதல்

    ஸ்டாலினை யார் யாரோ அரசியல் ரீதியாக விமர்சிப்பார்கள்.. அதிலும் அப்போதைய அதிமுக ஆட்சியில் வரைமுறை இல்லாமல் அநாகரீகமாக விமர்சித்த நிகழ்வுகளும் நடந்தது.. அவ்வளவு ஏன்? தான் ஒரு அமைச்சர் என்பதையே மறந்து ராஜேந்திர பாலாஜி போன்றோர் பேசிய அநாகரீகத்தை இந்த நாடே பார்த்து அதிர்ந்தது.

     தமிழிசைக்கு மரியாதை

    தமிழிசைக்கு மரியாதை

    ஆனால், எதிர்க்கட்சியில் இருந்தாலும், அரசியல் நாகரீகத்துடன், எல்லைமீறாமல் ஸ்டாலினை விமர்சித்து வருபவர்தான் தமிழிசை.. யார் தன்னை தாக்கி பேசினாலும் அவர்களின் பேச்சை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளாத ஸ்டாலின், தமிழிசை ஒரு ட்வீட் போட்டு அட்டாக் செய்தால், அதற்கு ஓடோடி சென்று மதிப்பளித்து பதில் ட்வீட் போடுவார்.

     நாகரீக கருத்துக்கள்

    நாகரீக கருத்துக்கள்

    தமிழிசையும் அப்படித்தான்.. ஜோதிமணியின் பல விமர்சனங்கள் காட்டமாக இருந்தாலும், அதையும் பொறுமையாக அணுகும்போக்கு தமிழிசையிடம் இருக்கிறது.. இத்தனைக்கும் ஒருமுறை "அரசியல் நாகரிகம் தெரியாதவர் ஸ்டாலின்" என்று தமிழிசை சொன்னவர்தான்.. அதற்கு பதிலடியாக, "திராவிடக் கட்சிகளை அழிக்க நினைக்கும் பாஜகவை எப்படி அழைக்க முடியும்" என்று ஸ்டாலின் சொன்னவர்தான்..

     திடீர் சந்திப்பு ஏன்

    திடீர் சந்திப்பு ஏன்

    இப்படி இருவருமே எதிரும் புதிருமாக இருந்து வரும் நிலையில், ஒரு நல்ல விஷயம் என்றால், பிறந்த நாள், விழா என்றால், மாறி மாறி போனை போட்டு பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்து கொள்பவர்களும்கூட. இப்படிப்பட்ட சூழலில்தான், இன்றைய தினம் ஸ்டாலினும் - தமிழிசையும் சந்தித்து கொண்டுள்ளனர்.. தான் ஆளுநராக பதவியேற்றது முதல் எத்தனையோ முறை சென்னைக்கு வந்திருக்கிறார் தமிழிசை.. ஆனால் அப்போதெல்லாம் ஸ்டாலினை சந்தித்து பேசிவிட்டு செல்லவில்லை.. ஆனால், இந்த முறை ஸ்டாலினை சந்தித்தது ஆச்சரியத்தை தருகிறது.

     முதல்வருடன் சந்திப்பு

    முதல்வருடன் சந்திப்பு

    ஒரு துணை நிலை ஆளுநர், மாநில முதல்வரை நேரில் சந்திக்க வருவாரா என்பது தெரியவில்லை.. ஒரே மாநிலம் என்றாலும் பரவாயில்லை.. பிரச்சனைகள் குறித்து விவாதிக்கலாம் எனலாம்.. ஆனால், சம்பந்தமே இல்லாத வேறு வேறு மாநில பொறுப்பில் உள்ளவர்கள் ஏன் சந்தித்து கொண்டார்கள் என்பதுதான் விளங்கவில்லை..

     வேறு காரணமா

    வேறு காரணமா

    ஒருவேளை இது மரியாதை நிமித்தமான சந்திப்பா? அல்லது வேறு ஏதாவது இருவரும் பேசினார்களா? அல்லது ஏதாவது "முக்கியத்துவம்" வாய்ந்த பிரச்சினை தொடர்பாக பேசினார்களா? என்றும் தெரியவில்லை.. ஆனால், சந்திப்பின்போது, ஒரு புத்தகத்தை பரிசாக ஸ்டாலினுக்கு தந்துள்ளார் தமிழிசை..

     புத்தகம் பரிசளிப்பு

    புத்தகம் பரிசளிப்பு

    தன்னை யார் சந்திக்க வந்தாலும், பொன்னாடைகள், மாலைகளுக்கு பதிலாக புத்தகங்களை கொடுங்கள் என்று ஸ்டாலின் ஒருமுறை சொல்லி இருந்தார்.. அதேபோல, தான் பிற தலைவர்களை சந்தித்தாலும் புத்தகங்களையே பரிசாக தந்தும் வருகிறார்.. அதனால்தான் தமிழிசையும் புத்தகத்தை பரிசாக தந்தார் போல தெரிகிறது.. எது எப்படியோ, கருணாநிதியின் மகனும், குமரியார் மகளும் அரசியல் நாகரீக எல்லையில் இப்படி தொடர்ந்து பயணித்து வருவது நமக்கு மகிழ்ச்சியையே தருகிறது..!

    English summary
    Puducherry LT Governor Tamilisai Soundararajan met CM MK Stalin yesterday and this has become a surprise for many, raised many questions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X