சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சந்தி சிரித்தபின் சந்திக்கிறேன் என்கிறார் கவிஞர்- வைரமுத்துவை விமர்சித்து தமிழிசை டுவீட்!

Google Oneindia Tamil News

சென்னை: சந்தி சிரித்தபின் சந்திக்கிறேன் என்கிறார் கவிஞர் என்று வைரமுத்துவை தமிழிசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

MeToo என்ற ஹேஷ்டேக்கில் பெண்கள், பிரபலங்கள் என பலதரப்பினர் தங்களுக்கு எதிராக நடந்த பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். இது கடும் புயலை வீசி வருகிறது.

பதில்

பதில்

இதுபோல் சின்மயியும் வைரமுத்து மீது ஒரு பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தார். இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த வைரமுத்து உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும் என்று டுவிட்டரில் பதிலளித்திருந்தார்.

[என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை.. வழக்கு தொடுத்தால் சந்திக்க தயார்- வைரமுத்து விளக்கம் ]

தயார்

தயார்

எனினும் அவர் மறுப்பு தெரிவிக்கவே இல்லை. இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து வைரமுத்து இன்று வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் என் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகள் பொய்யானவை. வழக்கு பதிவு செய்தால் அதை சந்திக்க தயாராக உள்ளேன்.

அவகாசம்

மூத்த வழக்கறிஞர்களுடன் ஒரு வாரமாக ஆலோசித்து வந்தேன் என்று வீடியோவில் வைரமுத்து கூறியுள்ளார். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தனது டுவிட்டரில் கூறுகையில் சந்தி சிரித்தபின் சந்திக்கிறேன் என்கிறார் கவிஞர் ...நிந்திக்க அவகாசம் கொடுத்து ஒரு வாரம் கழித்து சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன?சந்தக்கவிஞர்மீது சந்தேகமே அதிகரிக்கிறது........... என்று தெரிவித்துள்ளார்.

முகத்திரை

முகத்திரை

கடந்த இரு தினங்களுக்கு முன் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பேசிய தமிழிசை, ஆண்டாளை பழித்த கவிஞர் வைரமுத்துவின் முகத்திரையை சின்மயி மூலம் ஆண்டாளே கிழிக்கிறார். சின்மயி மூலம் முகத்திரையை கிழிக்கிறார் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamilisai Soundararajan tweet that Why Vairamuthu explains after 1 week his image tarnished?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X