சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மரகதலிங்கத்தை காப்பாற்ற "மாணிக்கத்தால்தான்" முடியும்- தமிழிசை

Google Oneindia Tamil News

சென்னை: மரகதலிங்கத்தை காப்பாற்ற மாணிக்கத்தால்தான் முடியும் என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக பழங்கால சிலைகளை கடத்தி விற்று வந்த சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த தீனதயாளன், கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சரணடைந்தார். ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரான இவர் தமிழகத்தில் உள்ள பழங்காலக் கோவில்கள் அனைத்தின் விவரமும் அடங்கிய புத்தகம் ஒன்றை வைத்து தனது தொழிலை நடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.

[செல்லூர் ராஜூவுக்கே தெரியாமல் மதுரைக்குள் ஊடுருவிய டெங்கு, பன்றிக் காயச்சல்!]

சிலைகள் கண்டெடுப்பு

சிலைகள் கண்டெடுப்பு

இந்த வழக்குகளை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் விசாரணை நடத்தி வருகிறார். இவரது தலைமையிலான குழுவினர் ஏராளமான சிலைகளை கண்டெடுத்துள்ளனர். ரன்வீர்ஷா வீட்டிலிருந்து மட்டும் 89 சிலைகளை பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.

உத்தரவு

உத்தரவு

இந்நிலையில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேலின் பதவிக்காலம் நவம்பர் 3-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதாகவும் அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க அரசுக்கு உத்தரவிடுமாறும் பலர் கோரி வருகின்றனர்.

கண்டனம்

இந்த நிலையில் உத்திரகேசமங்கை ஆலயத்தில் மரகதலிங்க நடராஜர் சிலையை திருட முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பரிசீலிக்க வேண்டும்

பரிசீலிக்க வேண்டும்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவீட்டில் உத்திரகோச மங்கை ஆலயத்தில் மரகதலிங்க நடராஜர் சிலையைத்திருட முயற்சி...என்ற செய்தி கவலை அளிக்கிறது. மரகதலிங்கத்தைக் காப்பாற்ற மாணிக்கத்தால்தான் முடியும். காவல்துறை உயர்அதிகாரி பொன் மாணிக்கவேல் பதவி நீடிப்பை கனிவுடன் அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

English summary
Tamilisai Soundararajan says that IG Pon Manickkavel's tenure should be extended for retrieving and protecting more statues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X