சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்!

புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை!-வீடியோ

    சென்னை: புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முதல்முறை பாஜக இப்படி நேரடியாக ரஜினியை எதிர்த்துள்ளது.

    புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது தமிழகம் முழுக்க வைரலாகி உள்ளது. இது பாஜக தலைவர்கள் பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. விஜயை அடுத்து சூர்யாவும் பாஜகவை எதிர்த்து பேசியது பரபரப்பாகி உள்ளது .

    பாஜக கட்சியை சூர்யாவின் கருத்து கடும் கோபத்திற்கு உள்ளாகி உள்ளது. இதற்கு தற்போது ரஜினியும் எதிர்வினையாற்றி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    புதிய கல்விக்கொள்கையில் நிறைய குளறுபடிகள் இருக்கிறது. ஏழை மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்று நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்து புகார்களை அடுக்கி இருந்தார். இதனால் ஏழை மாணவர்கள் சரியாக படிக்க முடியாது, இதில் சமத்துவம் கிடையாது என்று அவர் கூறினார். மிக தெளிவாக, நியாயமான கேள்விகளை அவர் முன் வைத்து இருந்தார்.

    ஆதரவு

    ஆதரவு

    இந்த நிலையில் சூர்யாவின் காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் ''நான்தான் மோடியிடம் புதிய கல்விக் கொள்கை குறித்து தெரிவிக்க வேண்டும் என்று இல்லை. சிலர் நான் இதுகுறித்து பேச வேண்டும் என்று கூறினார்கள். மோடிக்கு நான் சொன்னால் மட்டுமல்ல, சூர்யா சொன்னாலும் கேட்கும். நான் சூர்யாவின் கருத்தை முழுதாக ஆதரிக்கிறேன்'' என்று கூறினார்.

    இப்படியா

    இப்படியா

    முதல்முறை பாஜகவிற்கு எதிரான கருத்து ஒன்றுக்கு ரஜினிகாந்த் ஆதரவு அளித்து பேசி இருக்கிறார். இது பாஜக தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தமிழக திரையுலகில் எஸ் வி சேகருக்கு பின் மோடிக்கு ஆதரவாக பேசும் ஒரே நடிகர் ரஜினியாகத்தான் இருந்தார். ஆனால் அவரும் பாஜகவிற்கு எதிராக பேசியது அக்கட்சியை அதிர்ச்சி அடைய செய்தது.

    என்ன அதிர்ச்சி

    என்ன அதிர்ச்சி

    இதுதான் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியிலும் வெளிப்பட்டது. ரஜினி கருத்து குறித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ரஜினிகாந்த் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பேசியுள்ளார். இன்னும் ஒரு மாதம் அவகாசம் இருக்கிறது. அதற்குள் யார் வேண்டுமானாலும் புதிய கல்விக் கொள்கை குறித்து பேசலாம். ஒரு மாதத்திற்குள் இதில் உண்மையான நிலைப்பாட்டை அவர்கள் தெரிவிக்கலாம்.

    என்ன உண்மை

    என்ன உண்மை

    உங்களுக்கு என்ன நிலைப்பாடு என்பதை இந்த கொள்கையை முழுதாக படித்து பார்த்துவிட்டு தெரிவிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். பல்வேறு விஷயங்களை மனதில் வைத்துதான் அவர் இப்படி பேசி இருக்கிறார் என்கிறார்கள். இதற்கு முன்பு இதேபோல் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. இதேபோல் ரஜினியின் பேட்டி ஒன்று இணையம் இதற்கு முன் முழுக்க ஏற்கனவே வைரலாகி உள்ளது.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    இதற்கு முன் ஒருமுறை ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அதில் அவரிடம் ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றிருக்கும் 7 தமிழர்களின் விடுதலை குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர் , யார் அந்த 7 பேர். 7 பேரின் விடுதலை குறித்து எனக்கு தெரியாது. அதுகுறித்து இப்போதுதான் கேள்விப்படுகிறேன், என்று கூறினார்.

    மறுநாள் என்ன நடந்தது

    மறுநாள் என்ன நடந்தது

    ரஜினிகாந்தின் இந்த பேட்டி குறித்து தமிழிசை சௌந்தரராஜன், மீண்டும் ரஜினியிடம் அதே கேள்வியை கேட்டு இருக்க வேண்டும். ரஜினியிடம் மீண்டும் கேள்வி கேட்க இருந்தால் வேறு பதில் வந்திருக்கும், என்று கூறினார். அதேபோல் மறுநாள் ரஜினிகாந்த் அந்த கேள்விக்கு சரியாக பதில் சொன்னார். தமிழிசை சொன்னது போல ரஜினி சரியாக பதில் அளித்தார்.

    இப்போதும் அப்படித்தான்

    இப்போதும் அப்படித்தான்

    இந்த நிலையில் தற்போது புதிய கல்வி கொள்கை குறித்து ஒரு மாதத்தில் கருத்துக்களை கூறலாம் என்று தமிழிசை கூறியுள்ளார். இது ரஜினிகாந்திற்கு தமிழிசை கொடுக்கும் சிக்னல் என்கிறார்கள். இன்னும் ஒரு மாதத்திற்குள் ரஜினி புதிய கல்வி கொள்கை குறித்து வேறு கருத்தை தெரிவிக்கலாம். பாஜகவிற்கு ஆதரவாக அவர் பேச வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். தமிழிசையா சொன்னபடியே புதிய கல்விக் கொள்கை குறித்து ரஜினி தனது நிலைப்பாட்டை மாற்ற வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    English summary
    TN BJP chief Tamilisai Soundararajan first time fights with Rajini Kanth - What is happening?.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X