சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொன்னாருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வாரா?.. சித்தப்பாவை போட்டு தாக்குவாரா?.. தர்ம சங்கடத்தில் தமிழிசை

Google Oneindia Tamil News

Recommended Video

    வசந்தகுமாரை எதிர்த்து பிரச்சாரம் செய்வாரா?.. தர்மசங்கடத்தில் தமிழிசை- வீடியோ

    சென்னை: கன்னியாகுமரியில் போட்டியிடும் தனது சீனியரான பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்வாரா இல்லை தனது சித்தப்பாவான வசந்தகுமாரை போட்டு தாக்குவாரா என்ற தர்மசங்கடத்தில் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளார்.

    அரசியல் என்றாலே அதில் பல வகைகள் உண்டு. ஒரு குடும்பத்தினர் காலம் காலமாக ஒரே கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருவது ஒரு ரகம். ஒரு கட்சியில் அப்பா ஒரு கட்சிக்கும், மகனோ மகளோ ஒரு கட்சிக்கும் ஆதரவு தெரிவிப்பது இன்னொரு ரகம், அது போல் அண்ணன் ஒரு கட்சியிலும் தம்பி ஒரு கட்சியிலும் இருப்பர்.

    இதனால் பிரசார கூட்டங்களில் தாக்கி பேசும் போது தர்மசங்கடம் ஏற்படும் நிலை உண்டு. என்னதான் குடும்பமாக இருந்தாலும் வேலைனு வந்துட்டா நான் வெள்ளைக்காரன் என்பதை போல் போட்டினு வந்துட்டா நான் பொல்லாதவன் என்ற நிரூபிக்க வேண்டிய நிலை உள்ளது.

    வீட்டுக்கு ஒரு கார் என்ன? ஹெலிகாப்டரேகூட தரட்டும்.. தினகரன் கட்சி ஆட்டத்துலயே இல்லை.. அமைச்சர் கலாய் வீட்டுக்கு ஒரு கார் என்ன? ஹெலிகாப்டரேகூட தரட்டும்.. தினகரன் கட்சி ஆட்டத்துலயே இல்லை.. அமைச்சர் கலாய்

    வேட்பாளர் பட்டியல்

    வேட்பாளர் பட்டியல்

    நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

    எதிராளி

    எதிராளி

    அதில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜகவை எதிர்த்து நாங்குநேரி எம்எல்ஏவாக உள்ள எச் வசந்தகுமார் போட்டியிடுகிறார். எப்படியும் ஒரு கட்சியின் தலைவரோ மாநில தலைவரோ பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது தனது கட்சி வேட்பாளரின் பலத்தை காட்டிலும் எதிராளியின் பலவீனத்தையே கூறுவதுண்டு.

    எச் வசந்தகுமார்

    எச் வசந்தகுமார்

    அந்த வகையில் பாஜக மாநில தலைவர் தமிழிசை பாஜகவில் உள்ளார். அது போல் குமரியில் போட்டியிடும் எச் வசந்தகுமார் தமிழிசையின் சித்தப்பா ஆவார்.

    தர்மசங்கடம்

    தர்மசங்கடம்

    தூத்துக்குடியில் போட்டியிடும் தமிழிசை சவுந்திரராஜன், எப்படியும் கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு பிரசாரம் செய்யும் போது தமிழிசைக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்படும் நிலை உள்ளது.

    வாக்குச் சேகரிப்பு

    வாக்குச் சேகரிப்பு

    பொன் ராதாகிருஷ்ணன் இதற்கு முன்னர் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் நிகழ்த்திய சாதனைகளை தமிழிசை பட்டியலிட்டு வாக்குச் சேகரிப்பாரா, இல்லை எச் வசந்தகுமாரை தாக்கி பேசி வாக்குச் சேகரிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    சீனியரா சித்தப்பாவா

    சீனியரா சித்தப்பாவா

    எதிர் வேட்பாளரை தாக்கி பேசாவிட்டால் கட்சி தலைமையின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும். சொந்த சித்தப்பா தாக்கி பேசினால் வீட்டுக்குள் அதிருப்தி நிலவும். இது போன்ற சூழலில் சீனியரா சித்தப்பாவா என கேட்டால் தமிழிசை என்னதான் முடிவு எடுப்பாரோ!

    English summary
    BJP State president Tamilisai Soundararajan is in delicated situation as her party senior and her relative are competing in Kanyakumari LS.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X