சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசியல்வாதி மட்டுமல்ல அன்பான அக்கா தமிழிசை சவுந்தராஜனுக்கு மகளிர் தினத்தில் சர்வதேச விருது

தெலங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன்க்கு சர்வதேச தலைசிறந்த 20 பெண்கள் விருது வழங்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: அமெரிக்க காங்கிரஸ் ஆலோசனை பணிக் குழு சார்பில் 2020ஆம் ஆண்டுக்கான சர்வதேச தலைசிறந்த பெண்மணியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அவருக்கு தலைசிறந்த பெண்மணிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

Recommended Video

    உலகின் தலைசிறந்த 20 பெண்கள்... விருதை பெற்ற ஆளுநர் தமிழிசை!

    காங்கிரஸ் பாரம்பரியம் கொண்ட குடும்பத்திலிருந்து வந்த தமிழிசை சவுந்தரராஜன், பாஜகவில் இணைந்து பணியாற்றி வருகிறார். பெண் அரசியல் தலைவர்களில் குறிப்பிட்டு பெயர் சொல்லக்கூடிய அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளவர் தமிழிசை சவுந்தராஜன்.

     கமலின் 'ஒன்லி சிட்டி' கான்செப்ட்.. தேர்தலில் எடுபடுமா? மனதுக்குள் புழுங்கும் நிர்வாகிகள் கமலின் 'ஒன்லி சிட்டி' கான்செப்ட்.. தேர்தலில் எடுபடுமா? மனதுக்குள் புழுங்கும் நிர்வாகிகள்

    உருவ கேலி, கிண்டலை எதிர்கொண்டு அதற்கு பக்குவமாக பதிலடி கொடுத்துள்ளார். அனைத்து கட்சியினராலும் அனைவராலும் பாசத்துடன் அக்கா என்று அழைக்கப்படும் பெருமைக்குரியவர் தமிழிசை சவுந்தராஜன்.

    தமிழிசை சவுந்தரராஜன்

    தமிழிசை சவுந்தரராஜன்

    தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களுக்கு ஆளுநராக இருக்க கூடிய அளவிற்கு தன்னை பக்குவப்படுத்திக்கொண்டார்.
    அரசியல்வாதியாக இருந்தலும் அன்பான செயல்பாடுகளால் அனைவரும் அக்கா என்று அழைக்கப்படும் அளவிற்கு பாசத்திற்குரியவர் தமிழிசை சவுந்தராஜன்.

    சிறந்த பெண்மணி

    சிறந்த பெண்மணி

    சர்வேதச பெண்கள் தினத்தை முன்னிட்டு அமெரிக்க காங்கிரஸ் ஆலோசனை பணிக் குழு சார்பில் 2020ஆம் ஆண்டுக்கான சர்வதேச தலைசிறந்த பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதுக்காக உலகம் முழுவதிலிலுமிருந்தும் 20 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்த விருது தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கும் வழங்கப்பட்டது. இல்லினாய்ஸில் இருந்து காணொளி மூலம் நடைபெற்ற விழாவில் விருதினை பெற்றுக்கொண்டார் தமிழிசை சவுந்தராஜன்.

    சர்வதேச விருது

    சர்வதேச விருது

    தமிழிசைக்கு விருது வழங்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்கும்போது, 'பெண்கள் உரிமை, பாலின சமத்துவம், பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கு சமத்துவம் போன்றவற்றுக்கு குரல் எழுப்புவராக இருப்பதால் விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆளுநராக சிறப்பு

    தமிழிசை குறித்த அறிவிப்பில், மருத்துவராகவும், தமிழக பாஜக தலைவராகவும் இருந்த தமிழிசை தற்போது தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி பொறுப்புதுணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்து வருகிறார் என அவர் கடந்து வந்த பாதைகள் குறித்து புகழாரம் சூட்டப்பட்டது. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Puducherry Lt. Governor Tamilisai Soundararajan was presented the Top 20 Global Women of Excellence Award for 2020 at a US event that was live-streamed in the wee hours of Monday March 8th 2021.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X