• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

திமுக பக்கம் சாய்கிறதா பாஜக.. வாஜ்பாய் இருக்கும்போது நடந்தது.. மீண்டும் நடக்குமா "யதார்த்த அரசியல்?"

|

சென்னை: மாற்றம் ஒன்றே மாறாதது என்ற வார்த்தை யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ.. நம் தமிழக அரசியலுக்கு நிச்சயம் பொருந்தியே வந்துள்ளது.. இனியும் பொருந்தும்.. தற்போதைய ஒரு அனுமானம் என்னவென்றால், பாஜக மெல்ல திமுக பக்கம் சாய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தேசிய அளவில் பாஜக முதன்மை கட்சியாக... ஏகப்பட்ட மாநிலங்களில் தேர்தல் வெற்றிகளைக் குவித்தாலும் தென் மாநிலங்களில் அதுவும் தமிழகத்தில் இன்னும் 3 சதவீத வாக்கு வங்கியை தாண்ட முடியாமல் இருப்பதுதான் அதன் வருந்தத்தக்க நிலைமை!

இதை அமித்ஷா, மோடி முதல் யாராலுமே ஜீரணிக்கவும் முடியவில்லை... தமிழகத்தில் பாஜகவால் வளர முடியாததற்கு திராவிட அரசியல், அதிமுக, திமுக ஆகிய இரு மாநில கட்சிகளின் செல்வாக்கு தான் முதன்மை காரணம் என்பதை மெதுவாகத்தான் பாஜக மேலிடம் புரிந்து கொண்டது.. திராவிட கட்சிகள் இல்லாமல் தமிழகத்தில் தம்மால் ஒரு இம்மியளவுகூட முன்னேற முடியாது என்ற யதார்த்தத்தையும் உணர்ந்து கொண்டுவிட்டது.

மக்கள் நடமாடும் மார்க்கெட்.. தூக்கில் தொங்கிய மே.வங்க பாஜக எம்எல்ஏ! தற்கொலை கடிதத்தில் 2 பெயர்கள் மக்கள் நடமாடும் மார்க்கெட்.. தூக்கில் தொங்கிய மே.வங்க பாஜக எம்எல்ஏ! தற்கொலை கடிதத்தில் 2 பெயர்கள்

 திமுக

திமுக

அதனால்தான் தன் நிலைப்பாட்டையும் மெல்ல மெல்ல மாற்றி கொண்டு வருகிறது.. அந்த வகையில், தமிழகத்தில் வேரூன்றுவதற்கான காரணங்கள், தடையாக இருப்பது என்ன? என்றெல்லாம் ஆராய்ந்தும் வருகிறது.. இது சம்பந்தமாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசையிடம், தமிழிசையின் நிலைமையை கட்சி மேலிடம் நன்றாகவே கேட்டு தெரிந்து கொண்டுள்ளதாக தெரிகிறது.

 நுணுக்கம்

நுணுக்கம்

தமிழிசையை பொறுத்தவரை, குழந்தையில் இருந்தே தமிழக அரசியலின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் கவனித்து வருபவர்.. இன்று பாஜக என்றும், தாமரை என்றும் தமிழகத்தில் ஆங்காங்கே சில உச்சரிப்புகள் கேட்கிறது என்றால், அது தமிழிசை என்ற பெண்ணின் அசாத்திய ஆளுமையும், மிக சிறந்த குணமும்தான்!

 கூட்டணி

கூட்டணி

அந்த வகையில் தமிழிசை பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும் ஒரு ரிப்போர்ட் அனுப்பி உள்ளாராம்.. அதில், அவர் குறிப்பிட்டு சொல்லி உள்ளது திமுக-வை பற்றிதானாம்.. காங்கிரசுடன் 5 முறை கூட்டணி வைத்துள்ளனர்.. 5 முறையும் காங்கிரஸ் ஜெயித்ததற்கு காரணம் திமுகதான்.. திமுகவால் காங்கிரசுக்கு பெரிய லாபம் தமிழகத்தில் கிடைத்து வருகிறது... ஆனால், அதிமுக கூட்டணியால் தமிழகத்தில் பாஜகவுக்கு அவ்வளவாக லாபம் இல்லை... பாஜக தலைவர்களுக்கு எந்த மரியாதையும் அதிமுகவில் தரப்படுவதில்லை.. வரும் தேர்தலில் 30 சீட் தருவதே பெரிய விஷயம்" என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

 பரிசீலனை

பரிசீலனை

பாஜக-அதிமுகவுடன் இணக்கமான போக்கு இல்லை என்பது போன இடைத்தேர்தலிலேயே மக்களுக்கும் தெரிந்த விஷயம்தான்.. இருந்தாலும் இந்த ரிப்போர்ட்டை பாஜக பரிசீலிக்கும் என்றே தெரிகிறது.. அதிமுகவிடம் தொங்கி கொண்டிருப்பதை காட்டிலும், திமுகவுடன் நல்ல அணுகுமுறையை கையாளலாம் என்றுகூட தெரிகிறது. ஸ்டாலினை இப்படி தினமும் எதிர்த்து கொண்டிருப்பதால், தன் கட்சிக்கு லாபம் இல்லை என்பதையும் உணந்து வருவதாக சொல்லப்படுகிறது.

 கூட்டணி

கூட்டணி

அதனால், இனி தமிழகத்தில் தாமரையை மலர வைக்க வேண்டும் என்றாலோ அல்லது வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தாலோ, ஒன்று, பாஜக தனித்து நிற்கலாம்.. அல்லது திமுகவிடமிருந்து காங்கிரஸை பிரிக்கும் முயற்சியில் இறங்கலாம் அல்லது திமுகவிடம்கூட கூட்டணியும் அமைக்கலாம்.. என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக

அதிமுக

இதில் இன்னொரு விஷயமும் கவனிக்கத்தக்கதாக உள்ளது.. இன்றைய சூழலில் அதிமுக-பாஜக உறவு மேலும் விரிசல் அடைந்து வருவதாகவே தெரிகிறது.. "தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் முருகன் வலியுறுத்தி உள்ளது, அதிமுகவுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.. கடந்த எம்பி தேர்தல் சமயத்திலேயே தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் குறித்த விவகாரம் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.. இப்போது முருகன் திரும்பவும் இந்த விஷயத்தை கிண்டி எடுத்துள்ளதால், மோதல் போக்கு நிச்சயம் உருவாகக்கூடும்.

 யதார்த்த அரசியல்

யதார்த்த அரசியல்

அதேசமயம், திமுகவுடன் எப்படிப்பட்ட அணுகுமுறையை கையாள போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.. ஒருமுறை எச்.ராஜா, "திராவிடக் கட்சிகளின் அழிவில் தான் தமிழகத்தின் எதிர்காலம் உள்ளது" என்று சொல்லியிருந்தார்.. ஆனால், "யதார்த்த அரசியல்" வேறு பாதையில் சென்று கொண்டிருக்கிறது!

English summary
sources say that, tamilisai soundarajan report to pm modi on tamilnadu politics
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X