சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எக்காலத்திலும் தமிழகத்தில் இந்தியை திணிக்கமாட்டோம்.. தமிழிசை பரபரப்பு பேட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியை திணிக்க முயன்றால் வேடிக்கை பார்க்க மாட்டோம்: முத்தரசன் எச்சரிக்கை

    சென்னை: எக்காலத்திலும் தமிழகத்தில் இந்தியை திணிக்கமாட்டோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

    தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்தியை அனைத்து மாநில மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும் என கஸ்தூரி ரங்கன் குழு வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    இதன்படி மும்மொழி கொள்கை, அதாவது இந்தி மொழியும் 3-ஆவது மொழியாக திணிக்கப்படுவதாகும். 8-ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயமாக்கப்படும் என்பதுதான் இந்த புதிய கொள்கையின் வரைவு அறிக்கையாகும். இதற்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

    ஸ்டாப் இந்தி

    ஸ்டாப் இந்தி

    இதுதொடர்பாக இந்த குழுவின் இணையத்தில் வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் #stophindiimposition என்ற ஹேஷ்டேக் பிரபலமாகியுள்ளது.

    தமிழிசை

    தமிழிசை

    இந்த மும்மொழிக் கொள்கைக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் சந்தித்தார்.

    திசை திருப்பும் செயல்

    திசை திருப்பும் செயல்

    அப்போது அவர் கூறுகையில் எக்காலத்திலும் தமிழகத்தில் இந்தியை திணிக்கமாட்டோம். மாணவர்கள் விரும்பியதை படிக்க பாஜக வரவேற்கிறது. மும்மொழி கொள்கையை வைத்து மக்களை திசை திருப்புகின்றனர் என தமிழிசை தெரிவித்தார்.

    இருமொழிக் கொள்கை

    இருமொழிக் கொள்கை

    மும்மொழிக் கொள்கை குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    English summary
    TN BJP President Tamilisai Soundararajan says that Hindi will not be imposed in Tamilnadu at any cost.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X