சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருப்பி அடிக்க எங்களுக்குத் தெரியும்.. ஆனால் அது வேண்டாம்.. வைகோவுக்கு தமிழிசை பதில்

Google Oneindia Tamil News

Recommended Video

    எங்களுக்கும் திருப்பி அடிக்க தெரியும்.. வைகோவுக்கு தமிழிசை பதில்- வீடியோ

    சென்னை: பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டிய வைகோவுக்கு திருப்பி காட்ட எங்களுக்கும் தெரியும். ஆனால் அதை நாங்கள் செய்யமாட்டோம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் வரும் 10ஆம் தேதி பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா நேற்று நடைபெற்றன. அப்போது சென்னை வண்ணாரப்பேட்டை- டிஎம்எஸ் இடையே மெட்ரோ சேவை காணொலி காட்சி மூலம் பிரதமர் தொடங்கி வைத்தார்.

    கருப்புக் கொடி

    கருப்புக் கொடி

    அப்போது பிரதமருக்கு எதிராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருப்பு கொடி காட்டினார். இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழக மக்களின் கொந்தளிப்பை காட்டும் விதமாக கருப்புக் கொடி காட்டினோம் என்று வைகோ விளக்கம் அளித்தார்.

    பெண் தொண்டர் மீது தாக்குதல்

    பெண் தொண்டர் மீது தாக்குதல்

    இந்த நிலையில் வைகோ கருப்பு கொடி காட்டியது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மட்டும் கருப்பு கொடி காட்டியுள்ளார். பாஜக பெண் தொண்டரை தாக்கியுள்ளனர்.

    எங்களுக்கும் தெரியும்

    எங்களுக்கும் தெரியும்

    கருப்புக் கொடி காட்டும் வைகோவின் வெற்றி அரசியல் தமிழகத்தில் எடுபடாது. எங்களுக்கும் கருப்புக் கொடி காட்டத் தெரியும். அது வேண்டாம் என நினைக்கிறோம்.

    ஸ்டாலின் மீது விமர்சனம்

    ஸ்டாலின் மீது விமர்சனம்

    தி.மு.க. ஆட்சியில் தான் மின்சாரத்திற்கு ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று கூறிய 3 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். விவசாயிகளை கொன்றது தி.மு.க. தற்போது பா.ஜனதாவை ஸ்டாலின் விமர்சிக்கிறார் என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

    English summary
    Tamilisai Soundararajan criticises Vaiko that his black flag protest will not work out in Tamilnadu. We too know how to show black flag.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X