சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஐ.. இங்க பாருங்க.. தமிழகத்தில் தாமரை மலந்துருச்சி.. தமிழிசை சவுந்தரராஜன் செம

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும், என்று தொடர்ச்சியாக சொல்லி வருபவர் பாஜக தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.

தமிழிசையின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். ஆனாலும், தமிழிசை விடுவதாக இல்லை. கடலில் கூட தாமரை மலரும் என்று தூத்துக்குடி தேர்தல் பிரச்சாரத்தில் அவர் உணர்ச்சி பொங்க தெரிவித்திருக்கிறார்.

Tamilisai Soundararajan shared Lotus picture in twitter

வந்ததே லேட்டு.. டயலாக்கே கிடையாது.. ஒன்லி ஆக்‌ஷன்தான்.. சைகை காட்டியபடி போன பிரேமலதாவந்ததே லேட்டு.. டயலாக்கே கிடையாது.. ஒன்லி ஆக்‌ஷன்தான்.. சைகை காட்டியபடி போன பிரேமலதா

அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து, இந்த லோக்சபா தேர்தலை எதிர்கொண்டு வருகிறது. எனவே இரட்டை இலையில் எப்படி தாமரை மலரும் என்று இந்த கூட்டணியை கருப்பொருளாக வைத்து கிண்டல் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர்களும் உண்டு.

இதற்கு பதிலடி தரும் விதமாக தமிழிசை சௌந்தரராஜன் இன்று ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். "தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட போடுபட்டி கிராமத்தில் இரட்டை இலையில் தாமரையை மலர வைத்து வரவேற்பளித்த சகோதரிகளுக்கு நன்றி" இவ்வாறு அந்த ட்வீட்டில் கூறியுள்ளார்.

தமிழிசையை வரவேற்று எடுக்கப்பட்ட ஆரத்தி தட்டில் தாமரை மலர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதனுடன் அரச மர இலைகள் வைக்கப்பட்டிருந்தன. இதைத்தான் இவர் இரட்டை இலையில் தாமரையை மலர வைத்ததாக குறிப்பிட்டுள்ளார். எப்படியோ தாமரையை மலரை வைத்து விட வேண்டும் என்று ஒவ்வொரு வினாடியும் தமிழிசை சிந்தித்து வருகிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

English summary
BJP Chief Tamilisai Soundararajan shared Lotus picture with leaves in twitter and says Lotus already bloomed in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X