சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அம்மா வீட்டுக்கு வரும் குழந்தையாக மாறி விடுகிறேன்.. தமிழிசை செளந்தரராஜன் நெகிழ்ச்சி + மகிழ்ச்சி!

தாய்வீட்டுக்கு வரும் குழந்தை போல உணர்வதாக தமிழிசை தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "அம்மா வீட்டிற்கு வரும் குழந்தையாகவே நான் தமிழகத்துக்கு ஓடி வருகிறேன்" என்று என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தராஜன் நியமனம் ஆனதில் இருந்தே, அவரை பற்றின பரபரப்பு செய்திகள் குறைந்துவிட்டன. எனினும், தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக தமிழிசை கலந்து கொண்டு வருகிறார்.

tamilisai soundararajan speech at tn doctors association

அந்த வகையில், தமிழ்நாடு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை, கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் சொல்லும்போது,
"கனடா நாட்டில் மகப்பேறு, குழந்தைகளுக்கு ஸ்கேன் பழகி, நிபுணத்துவம் பெற்றிருக்கேன்.. இதுவரை என் மருத்துவத்தில் நான் தவறு செய்ததே கிடையாது..

ஒருநாளைக்கு 50 குழந்தைகளுக்குகூட நான் ஸ்கேன் பார்த்திருக்கிறேன்.. அப்படி ஒரு டாக்டராக இருந்தாலும், அந்த தலைக்கணம் எனக்கு ஏமாறாமல் பார்த்து கொள்வேன்.. டாக்டர் என்ற கிரீடத்தை கழற்றி வைத்து விட்டுதான் பாஜக தொண்டராக கமலாலயத்துக்குள் 20 வருடத்துக்கு முன்பு நுழைந்தேன்.

தெலங்கானா ஆளுநர் மாளிகையை மக்கள் வந்து செல்லும் இடமாக மாற்றியிருக்கிறேன். எனக்கு முழு சக்தியை தந்ததே இந்த தமிழ்நாடுநான்.

தமிழ்நாட்டுக்கு வரணும் என்றாலே.. 2 நாளைக்கு முன்னாடியே எனக்கு குதூகலம் தொத்திக் கொள்கிறது.. அந்த ஆசை.. அந்த பாசம்.. அந்த அருள் என்னையும் அறியாமல் எனக்கு வந்து விடும்.. அதனால் தமிழ்நாடு வரும்போது, அம்மா வீட்டுக்கு வரும் குழந்தையாகவே நான் மாறிவிடுகிறேன்" என்றார்.

English summary
telangana governor tamilisai soundararajan speech at tn doctors association and says that "Whenever I visit tamilnadu, I feel like a child"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X