சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசியல் பச்சோந்தியின் பரிதவிப்பு.. கடுமையாக விமர்சிக்கும் தமிழிசை.. யாரைன்னு பாருங்க!

எதிர்க்கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: எதிர்க்கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.

லோக்சபா தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தேர்தலுக்கு பின்பான கூட்டணி குறித்து 21 கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக வரவில்லை என்றால் இவர்கள் எல்லோரும் கூட்டணி அமைத்து பிரதமரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

Tamilisai Soundararajan tweets on Chandrababu Naidu and his meetings

இதில் காங்கிரஸ் கட்சியும் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுதான் இந்த கூட்டணியை உருவாக்கும் பணியில் இறங்கி கடுமையாக உழைத்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக இவர் முக்கிய தலைவர்களை சந்தித்து வருகிறார்.

Tamilisai Soundararajan tweets on Chandrababu Naidu and his meetings

மாநில தலைவர்களான திமுக தலைவர் ஸ்டாலின், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ் வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பிஜு பட்நாயக், சரத் பவார் உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்தித்தார்.

மோடியின் 'தியானம்'- குகையே இல்லையாம்.. அரசின் 'குகை' மாடல் ஹெஸ்ட் ஹவுஸாம்.. வாடகை ரூ. 990 மோடியின் 'தியானம்'- குகையே இல்லையாம்.. அரசின் 'குகை' மாடல் ஹெஸ்ட் ஹவுஸாம்.. வாடகை ரூ. 990

இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவின் இந்த சந்திப்பு குறித்து தற்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.

அவர் தனது டிவிட்டில், அரசியல் பச்சோந்தியின் பரிதவிப்பு? மீண்டும் மோடி! மீண்டு வருவார் துரோகிகளின் பதவி சூதாட்டக்கனவுகளை தகர்த்து'' என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த டிவிட் பெரிய விமர்சனங்களை சந்தித்துள்ளது. சந்திரபாபு நாயுடு திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க உள்ளார்.

சந்திரபாபு நாயுடுவின் முன்னெடுப்புதான் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamilisai Soundararajan tweets on Chandrababu Naidu and his meeting with politicians.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X