சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடப்பாடியை சந்தித்தேன்.. ஆனா கூட்டணி குறித்தெல்லாம் பேசவில்லை.. பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: திருவாரூா் தேர்தல் களம் எப்படி இருக்கும் தெரியாத நிலையில், சென்னையில் முதல்வா் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதா கிருஷ்ணன் ஆலோசனை நடத்தியது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

திருவாரூா் தொகுதியில் இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தோ்தல் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு, தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

ஆனாலும், திமுக சார்பில் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். டிடிவி தினகரனின் அமமுக சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் காமராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுக சார்பில் ஓரிரு நாளில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

தேர்தல் தொடர்பாக ஆலோசனை

தேர்தல் தொடர்பாக ஆலோசனை

தேர்தல் குறித்து, அனைத்து கட்சிகளுடன் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் ஆலோசனை நடத்தினார். அது தொடர்பான அறிக்கையையும் அவர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துவிட்டார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது, தேர்தல் ஆணையத்தின் சார்பில், அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதன் முடிவு எப்படி இருக்கும் என்று தெரியாத நிலை தான் தற்போது உள்ளது.

முதல்வருடன் தமிழிசை சந்திப்பு

முதல்வருடன் தமிழிசை சந்திப்பு

இந் நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் திடீரென முதல்வா் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், திருவாரூா் இடைத்தோ்தல் தொடா்பாக மு.க.ஸ்டாலினுக்கும் உள்ளுக்குள் பயம் உள்ளது.

லோக்சபா தேர்தலில் கவனம்

லோக்சபா தேர்தலில் கவனம்

திருவாரூா் இடைத்தோ்தல் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம். இடைத்தோ்தலை விட லோக்சபா தோ்தலில் கவனம் செலுத்துவதே எங்கள் நோக்கம். இந்த சந்திப்பின் போது கூட்டணி குறித்து விவாதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

முதல்வருடன் சந்திப்பு

முதல்வருடன் சந்திப்பு

முதல்வரை தமிழிசை சந்தித்த சிறிது நேரத்தில் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணனும் முதல்வா் பழனிசாமியை சந்தித்து பேசினார். சந்திப்பில் கூட்டணி குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அரசியல் பற்றி விவாதிக்கவில்லை

அரசியல் பற்றி விவாதிக்கவில்லை

ஆனால், சந்திப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் பேசுகையில் நாகா்கோவில் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயா்த்துவது குறித்து ஆலோசித்தோம். இந்த சந்திப்பில் கூட்டணி குறித்தோ, அரசியல் குறித்தோ ஆலோசிக்கவில்லை என்று தெரிவித்தார்.

கூட்டணிக்கான ஆலோசனை?

கூட்டணிக்கான ஆலோசனை?

ஆனால், அரசியல் திறனாய்வாளர்களின் கருத்து வேறாக இருக்கிறது. திருவாரூா் தொகுதி இடைத்தோ்தல் குறித்தும், லோக்சபா கூட்டணி குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமையும் பட்சத்தில், அந்த கூட்டணிக்குள் மேலும் சில கட்சிகளை இணைப்பது குறித்தும் பேசியிருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

அதிமுக எம்பிக்களின் கருத்து

அதிமுக எம்பிக்களின் கருத்து

அதே நேரத்தில் மேகதாது விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் நடந்து கொண்ட விதம், பாஜக குறித்து துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்த கருத்து, அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மத்திய இணை அமைச்சர் ஒருவர் நகராட்சியை மாநகராட்சியை தரம் உயர்த்துவது குறித்து பேச வேண்டிய தேவை இருக்குமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

English summary
Tamilnadu BJP president Tamilisai Sounderrajan and Minister of State Pon.Radhakrishnan met Chief Minister Edapddi Palanisamy in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X