சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கமர்கட் தந்து காது கம்மலை திருடிய தி.மு.க.... வார்த்தை ஜாலங்களில் விளையாடும் தமிழிசை

Google Oneindia Tamil News

சென்னை: பொய்யான வாக்குறுதிகள் எனும் கமர்கட் தந்து கம்மலை திருடிய திமுக என கடுமையாக சாடியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக தி.மு.க.-காங் கூட்டணி எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து பெருமிதப்படும் ஸ்டாலின், அவைக்குறிப்பில் ஏறாத கோஷங்கள், கோரிக்கை மனு அளிப்பு வேஷங்கள், இல்லாத இந்தி திணிப்பு எதிர்ப்பு நாடகங்கள், வந்துவிட்ட நீட் தேர்வுக்கு வீண் எதிர்ப்பும், வர மறுத்த காவிரி நீரை கோர மறந்த கூட்டணி தர்மம்?.

Tamilisai soundrarajan slams DMK

ஏற்கனவே இருந்த ரயில் ஊழியர் மொழி பயன்பாட்டு அரசாணைகளை உடனே அமலாக்கிய மைய அரசின் வேகத்தை எம்.பி.க்கள் சாதனை என வீண் ஜம்பம். பொய் வாக்குறுதி எனும் கமர்கட் தந்து காது கம்மலை திருடிய தி.மு.க., ஊழல் விஞ்ஞானிகளின் காதறுந்த ஊசிகள் அங்கே.

வீண் ஜம்பம் இங்கே? இனி தமிழகம் ஏமாறப்போவதில்லை தாமரை மலர்ந்தே தீரும். எதுவும் செய்ய இயலாதவர்கள் விமர்சிக்கிறார்கள் என்கிறார் ஸ்டாலின்.

ராத்திரியில் தூக்கம் இல்லை.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. நாங்குநேரியில் யாருப்பா நிற்கிறது? ராத்திரியில் தூக்கம் இல்லை.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. நாங்குநேரியில் யாருப்பா நிற்கிறது?

ஆம். பொய் வாக்குறுதி தர இயலாதவர்கள், ஓட்டுக்கு பணம் தர இயலாதவர்கள், ஊழல் செய்ய இயலாதவர்கள், வாரிசு அரசியல், குடும்ப அரசியல் செய்ய இயலாதவர்கள், கருப்பு பணம் பதுக்கி பணம் சேர்த்து அரசியல் வியாபாரம் செய்ய இயலாதவர்கள், தமிழ் மொழியை வைத்து அரசியல் பிழைப்பு நடத்த இயலாதவர்கள். ஆனாலும் விமர்சிக்கும் உரிமை எங்களுக்கு உண்டு.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

English summary
Tamilnadu BJP President Tamilisai Soundararajan slammed DMK on false promises.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X