சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூப்பர் அக்கா.. நம்ம தமிழிசை அக்காவுக்கு எவ்வளவு நல்ல மனசு பாருங்க..!

Google Oneindia Tamil News

Recommended Video

    தையல் தொழிலாளர் மகளின் மருத்துவ படிப்புக்கான முழு செலவையும் ஏற்கும் தமிழிசை- வீடியோ

    சென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசை தையல் தொழிலாளர் மகள் ஜீவிதாவின் மருத்துவ படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ஆம் தேதி நடைபெற்றது.

    இதில் நாடு முழுவதும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் கடந்த புதன் கிழமை வெளியானது.

    நீட்டில் அதிக தேர்ச்சி

    நீட்டில் அதிக தேர்ச்சி

    இதில் தமிழகத்தில் இருந்து 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 9.1 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சாதனை படைத்த ஜீவிதா

    சாதனை படைத்த ஜீவிதா

    இந்நிலையில் சென்னை அனகாப்புத்தூரைச் சேர்ந்த தையல் தொழிலாளியின் மகள் ஜீவிதா நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அரசுப்பள்ளி மாணவியான ஜீவிதா 720 மதிப்பெண்களுக்கு 605 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

    பெருமிதம் கொண்ட தமிழிசை

    பெருமிதம் கொண்ட தமிழிசை

    இந்த செய்தி நேற்று பத்திரிகைகளில் செய்தியாக வெளியானது. இதனை தமிழக பாஜக தலைவர் தமிழிசை நேற்றுக் காலை தனது டிவிட்டர் பக்கத்தில் மேற்கோள் காட்டி பெருமிதம்பட்டிருந்தார்.

    டாக்டர் ஆகப் போகிறார்

    மேலும் அரசுப்பள்ளியில் படித்த மாணவி நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளார் என்றும் தையல்காரரின் மகள் டாக்டர் ஆகப்போகிறார என்றும் கூறியிருந்தார் தமிழிசை. மேலும் பிரதமர் மோடிக்கு நன்றி என்றும் தமிழிசை கூறியிருந்தார்.

    மருத்துவ கனவு நனவாகட்டும்

    இந்நிலையில் ஜீவிதாவின் மருத்துவப்படிப்புக்கான அனைத்து கட்டண செலவுகளையும் தானே ஏற்றுக்கொள்வதாக தமிழிசை தெரிவித்துள்ளார். ஏழை தையல் தொழிலாளர் மகளின் மருத்துவ கனவு நனவாகட்டும் என்றும் மாணவிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    சைக்கிள் பரிசளித்த தமிழிசை

    சைக்கிள் பரிசளித்த தமிழிசை

    தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார் தமிழிசை சவுந்தரராஜன். தேர்தலில் தோல்வியடைந்தபோதும் பிரச்சாரத்திற்காக அங்கு தங்கியிருந்தபோது வீட்டில் வாட்மேனாக பணிபுரிந்த பச்சைபெருமாளின் 3வது மகள் கவிதாவுக்கு சைக்கிள் வாங்கி பரிசளித்தார். இந்நிலையில் ஜீவிதாவின் மருத்துவப்படிப்புக்கான செலவையும் ஏற்றுள்ளார் தமிழிசை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Tamilnadu BJP leader Tamilisai has announced that she take care of full cost of Medical study for Tamilnadu govt school poor student Jeevitha.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X