சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று 5,994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. 119 பேர் மரணம்.. ஒரே நாளில் கிடுகிடு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,994 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,96,901 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் மிக அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 119 பேர் பலியாகி உள்ளனர். இதனால் கொரோனாவால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 4,927ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோன பாதிப்பு நேற்று ஓரளவு குறைந்து இருந்த நிலையில் மீண்டும் 6 ஆயிரம் என்கிற அளவுக்கு உயர்நதுள்ளது. சென்னையில் தொற்று குறைந்த போதிலும் பல மாவட்டங்களில் பாதிப்பு மிக கடுமையாக அதிகரித்து வருகிறது.

tamilnadu 5,994 corona positive cases on Today

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,994 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,96,901 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 6,020 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 2,38,638ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போதைய நிலையில் 53,336 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 21.5 லட்சத்தை கடந்தது- உயிரிழப்பு எண்ணிக்கை 43,379இந்தியாவில் கொரோனா பாதிப்பு 21.5 லட்சத்தை கடந்தது- உயிரிழப்பு எண்ணிக்கை 43,379

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 68,179 பேருக்கு சுமார் 70,186 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 31,09,708 நபர்களுக்கு 32.25,805 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிக அதிகபட்சமாக சென்னையில் 989 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 397 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 393 பேருக்கும் திருவள்ளூரில் 396 பேருக்கும், தேனியில் 360 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

English summary
tamilnadu 5994 corona positive cases on Today. In Tamil Nadu, an unprecedented 119 people have died of corona in a single day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X