சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

11 மாவட்டங்கள்.. 11 பெண் ஆட்சியர்கள்.. தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறை.. தரமான முடிவு.. என்ன காரணம்?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக ஒரே நேரத்தில் அதிக பெண் ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட பொறுப்புகள் அதிக அளவில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Collector முதல் மொத்தபேரும் பெண்கள்.. அசத்தும் Pudukkottai மாவட்டம்

    தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். முந்தைய ஆட்சியில் இருந்து எல்லா ஆட்சியர்களும் மாற்றப்பட்டு, புதிய ஆட்சியர்கள் பதவி ஏற்று இருக்கிறார்கள்.

    ஆனி மாதத்தில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் ஆனி மாதத்தில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்

    கடந்த சில தினங்களில் மட்டும் தமிழ்நாட்டில் 93 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். இதில் 29 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

    பெண்கள்

    பெண்கள்

    இதில் முக்கியமாக பெண்கள் பலருக்கு மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வகிக்காத, திறமையான பெண் ஐஏஎஸ் அதிகாரிகள், பல்வேறு துறையில் இருந்து தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 11 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளனர்.

    எத்தனை பேர்

    எத்தனை பேர்

    தமிழ்நாட்டில் பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டு இருக்கும் மாவட்டங்கள்.

    அரியலூர் - ரமண சரஸ்வதி,
    சென்னை - விஜயராணி
    தருமபுரி - திவ்யதர்ஷினி
    காஞ்சிபுரம் - ஆர்த்தி
    மயிலாடுதுறை - லலிதா
    நாமக்கல்- ஸ்ரேயா பி சிங்
    பெரம்பலூர் - வெங்கட பிரியா
    புதுக்கோட்டை - கவிதா ராமு
    தென்காசி - சந்திரலேகா
    நீலகிரி- இன்னொசென்ட் திவ்யா
    திருவாரூர் - காயத்திரி கிருஷ்னன்

    அதிகம்

    அதிகம்

    தமிழ்நாடு வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் இத்தனை பெண் ஆட்சியர்கள் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இவர்கள் எல்லோரும் மிகவும் இளம் வயது அதிகாரிகள். பல்வேறு துறைகளில் தங்கள் திறமையை நிரூபித்து தற்போது ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் கண்டிப்புடன் இருப்பார்கள், மக்களுடன் நெருக்கமாக இருப்பார்கள், துரிதமாக நடவடிக்கை எடுப்பார்கள் என்ற கருத்து உண்டு.

    ஏன்

    ஏன்

    அதை மெய்ப்பிக்கும் வகையில் கொரோனா காலம் என்பதால் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கி இருக்கிறார். கொரோனாவிற்கு பின் பல அதிரடி திட்டங்களை செயல்படுத்த வேண்டும், துரிதமாக செயல்பட வேண்டும் என்பதால் வயது குறைந்த, திறமையான பெண் ஐஏஎஸ் அதிகாரிகளை ஆட்சியர்களாக நியமித்துள்ளார்.

    English summary
    Tamilnadu Government appoints 11 IAS officers as district collectors for the first time in history.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X