சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழர்களின் வரலாற்றை பறைசாற்ற திட்டம்.. கடல் அகழாய்வில் களமிறங்கும் தொல்லியல் துறை.. அதிரடி முடிவு!

தமிழர்களின் தொன்மத்தை வெளிக்கொணர கடல் அகழ்வாய்வு விரைவில் தொடங்கப்படும் என்று தமிழக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் தொடக்கம்!-வீடியோ

    சென்னை: தமிழர்களின் தொன்மத்தை வெளிக்கொணர கடல் அகழ்வாய்வு விரைவில் தொடங்கப்படும் என்று தமிழக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

    உலகில் ஹரப்பா, மொஹஞ்சதரோ உட்பட பல பழமை வாய்ந்த நாகரீகங்கள் இருக்கிறது. ஆனால் அந்த நாகரீகங்களை விட பழமையான நாகரீகமாக தற்போது கீழடி இருக்கிறது.

    அங்கு ஆய்வில் கிடைக்கும் பொருட்கள் எல்லாம் ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இந்த நிலையில் கீழடி ஆய்வு தந்த உத்வேகம் காரணமாக தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் அகழாய்வு செய்ய உள்ளனர்.

    ஐஎன்எக்ஸ்.. ப.சிதம்பரத்திற்கு இன்றோடு காவல் முடிகிறது.. சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்!ஐஎன்எக்ஸ்.. ப.சிதம்பரத்திற்கு இன்றோடு காவல் முடிகிறது.. சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்!

    தொல்லியல் முக்கியம்

    தொல்லியல் முக்கியம்

    அதன்படி தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தமிழகம் முழுக்க அகழாய்வு நடத்த இருக்கிறார்கள். வேலூர் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர், திருச்சி, தஞ்சாவூர், கன்னியாகுமரி, விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இனி வரும் நாட்களில் அதிகமாக ஆய்வுகள் செய்யப்படும்.

    சிவகங்கை எங்கே

    சிவகங்கை எங்கே

    தற்போது சிவகங்கையில்தான் அதிகமாக தொல்லியல் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இனி இன்னும் அது அதிகரிக்கப்படும். கடலோர பகுதிகளில் இனி அகழாய்வு நடத்தப்படும். இதன் மூலம் நிறைய அதிரடி வரலாற்று மாற்றங்கள் நிகழும். நடத்தப்படும் அகழாய்வு மூலம் நம்முடைய தொன்மங்கள் வெளியே வரும்.

    தேசிய கடல் ஆராய்ச்சி

    தேசிய கடல் ஆராய்ச்சி

    இதற்காக தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் முதல்கட்ட ஆலோசனை நடந்துள்ளது. வரலாற்று உண்மைகள் புரிய வரும். தமிழ்நாட்டின் பண்பாட்டு வரலாற்று உண்மைகள் கடலோர ஆய்வுகள் மூலம் உலகிற்கு புலப்படும் என்கிறார்கள்.

    கீழடி எப்படி

    கீழடி எப்படி

    கீழடியில் தற்போது 5வது கட்ட ஆய்வுகள் நடந்து வருகிறது. இது தொடர்ந்து நடத்தப்படும். அதேபோல் 2019-2020ம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் கீழடியை சுற்றியுள்ள இடங்களிலும் அகழாய்வு மேற்கொள்ள திட்டம் போடப்பட்டுள்ளது. கீழடியை சுற்றி இருக்கும் பகுதிகளிலும் ஆய்வுகள் விரிவுபடுத்தப்படும்.

    கொத்தகை எங்கே

    கொத்தகை எங்கே

    கொத்தகை, மணலூர், அகரம் ஆகிய இடங்களிலும் ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக்குழு ஒப்புதல் தந்த பின் 2020 ஜனவரியில் தொல்லியல் ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஆய்வுகள் மூலம் நிறைய முக்கிய வரலாற்று உண்மைகள் தெரிய வரலாம்.

    English summary
    Tamilnadu Archeological department plans for seawater excavation to find more historical truth.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X