சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக சட்டசபை இடைத் தேர்தல் Live: 18 தொகுதி சட்டசபை இடைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தது

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Election 2019: லோக்சபா தேர்தல்.. 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

    சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் 18 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி மொத்தம் 42.92 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூ தெரிவித்தார்.

    தேர்தல் நடைபெற்று வரும் தொகுதிகள் விவரம்: பூந்தமல்லி (தனி), பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம் (தனி), ஆம்பூர், ஒசூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர் (தனி), நிலக்கோட்டை (தனி), திருவாரூர், தஞ்சாவூர், மானாமதுரை (தனி), ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), பரமக்குடி (தனி), சாத்தூர், விளாத்திகுளம் ஆகியவைதான் அந்த சட்டசபை தொகுதிகளாகும்.

    இந்த தொகுதிகளுக்கான தேர்தல் தொடர்பான உடனடி அப்டேட்களுக்கு இந்த லைவ் பக்கத்தில் இணைந்திருங்கள்.

    Newest First Oldest First
    6:05 PM, 18 Apr

    18 இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவு

    தமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைந்துவிட்டது. 5 மணி நேர நிலவரப்படி தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் 67.08 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
    4:22 PM, 18 Apr

    குடியாத்தம் சட்டசபை தேர்தலில் மோதல்

    குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவில் அதிமுக கூட்டணி கட்சியினர் மற்றும் திமுகவினர் இடையே மோதல். கல்லூர் வாக்குச் சாவடி மையத்தில் நடந்த மோதலில் ரஞ்சித், அரவிந்த் ஆகியோர் காயம்.
    4:15 PM, 18 Apr

    தமிழக இடைத்தேர்தலில் 55.97% வாக்கு பதிவு

    தமிழகம்: தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நேர நிலவரப்படி இடைத்தேர்தலில் 55.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மக்களவை தேர்தலில் கரூரில் அதிகபட்சமாக 56.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சம் மத்திய சென்னையில் 45.65 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
    2:32 PM, 18 Apr

    பெரம்பூரில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

    சென்னையில் பெரம்பூர் பெரியார் நகர் வாக்குச் சாவடி மையத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். உணவு கொடுக்க சென்ற நாம் தமிழர் கட்சியினரின் முகவரை துணை ராணுவப் படை காவலர் தாக்தியதாக புகார். காவலர் தாக்கியதில் நாம் தமிழர் கட்சி முகவரின் கால் உடைந்ததால் வாக்குச் சாவடி முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    1:46 PM, 18 Apr

    தமிழக இடைத்தேர்தல்: 42.92 சதவீதம் வாக்குப் பதிவு

    தமிழகத்தில் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில் அதிகபட்சமாக ஆம்பூர் சட்டசபை தொகுதியில் 50.74 சதவீதம் வாக்குகளும் குறைந்தபட்சமாக பெரியகுளத்தில் 32.8 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளது.
    1:05 PM, 18 Apr

    தமிழகம்

    தமிழகம்
    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். சிறு வயது முதலே கொத்தடிமை வாழ்க்கையில் சிக்கிக் கொண்டார். இவர் தற்போது 85 ஆவது வயதில் முதல்முறையாக தனது வாக்கை பதிவு செய்தார். இதற்காக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காரில் கன்னியப்பனை ஆட்சியர் அழைத்து வந்தார்.
    12:23 PM, 18 Apr

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 28 பேருக்கு ஓட்டு இல்லை

    வேலூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 28 பேருக்கு ஓட்டு இல்லை. வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த கௌதமப்பேட்டை வாக்குச் சாவடியில் 28 பேரும் வாக்குவாதம் செய்தனர்.
    12:23 PM, 18 Apr

    வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் பெண் பலி

    சென்னையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் பெண் மரணமடைந்தார். மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டையில் சிசிலி மோரல் வாக்களிக்க வந்தார். அப்போது தேர்தல் அதிகாரியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டபோது நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
    11:44 AM, 18 Apr

    தமிழகம்

    தமிழகத்தில் காலை 11 மணி நேரப்படி அதிகப்பட்சமாக ஆரணி தொகுதியில் வாக்குப் பதிவு
    11:42 AM, 18 Apr

    அதிகப்பட்சமாக ஆரணியில் வாக்குப் பதிவு

    தமிழகத்தில் காலை 11 மணி நேர நிலவரப்படி அதிகபட்சமாக ஆரணி மக்களவை தொகுதியில் 36 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளது. அது போல் குறைந்தபட்சமாக மத்திய சென்னை மக்களவை தொகுதியில் 22.82 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளது.
    11:36 AM, 18 Apr

    சோளிங்கரில் 3 மணி நேரம் வாக்குப் பதிவு தாமதம்

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் மக்களவை தொகுதிக்குள்பட்ட சோளிங்கரில் வாக்குச் சாவடி இயந்திரம் கோளாறானது. 131-ஆவது வாக்குச் சாவடியில் ஈவிஎம் பழுதானதால் மக்கள் காத்திருக்கின்றனர். சுமார் 3 மணி நேரம் வாக்குப் பதிவு தாமதமானது.
    11:19 AM, 18 Apr

    ஆண்டிப்பட்டி

    தேர்தல் ரத்தாகும் என கூறப்பட்ட ஆண்டிப்பட்டியில் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது. இதில் காலை 11 மணி நிலவரப்படி 20.1 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளது.
    10:54 AM, 18 Apr

    மதுரை

    மதுரை அருகே மேலூரை அடுத்த திருவாதவூரில் மோதல். வாக்குச் சாவடியில் வாக்கு சேகரித்ததால் அதிமுக- அமமுக மோதல்
    10:53 AM, 18 Apr

    வாக்களித்தார் ராஜேந்திர பாலாஜி

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இடைத்தேர்தல் மற்றும் விருதுநகர் லோக்சபா தேர்தலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்களித்தார்.
    10:12 AM, 18 Apr

    வாக்களித்தார் துரைமுருகன்

    வேலூர் தொகுதி தேர்தல் ரத்தான நிலையில் துரைமுருகன் அரக்கோணம் எம்பி தொகுதிக்குள்பட்டவர் என்பதால் அவர் தனது வாக்கை பதிவு செய்தார். அவருடன் மகன் கதிர் ஆனந்தும் வாக்களித்தார். சோளிங்கர் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவையும் அளித்தனர்.
    9:44 AM, 18 Apr

    வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோளாறு

    தமிழகம்: பூந்தமல்லியில் 307-ஆவது வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்களிக்க முடியாமல் வாக்காளர்கள் அவதி. பெரியகுளம் செவன்த் டே பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு இயந்திரம் கோளாறு.
    9:41 AM, 18 Apr

    தமிழகம்

    பூந்தமல்லியில் 307-ஆவது வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்களிக்க முடியாமல் வாக்காளர்கள் அவதி. பெரியகுளம் செவன்த் டே பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு இயந்திரம் கோளாறு.
    9:36 AM, 18 Apr

    தமிழகம்

    ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக அலுவலகத்தில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வருமான வரிச் சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுக்காதவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனால் வேலூரை போல் ஆண்டிப்பட்டி சட்டசபை இடைத்தேர்தல் ரத்தாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது வாக்குப் பதிவு நடந்து வருகிறது.
    9:19 AM, 18 Apr

    தமிழகம்

    தேனி நாடாளுமன்றத் தேர்தல், பெரியகுளம் சட்டசபை இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கு வாக்களிக்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகன் ரவீந்திரநாத்தும் வருகை தந்துள்ளனர். தேனி எம்பி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் களத்தில் உள்ளார்.
    8:43 AM, 18 Apr

    தமிழகம்

    சென்னை புழலில் உள்ள பப்ளிராஜா அரசுப் பள்ளியில் வாக்குப் பதிவு இயந்திரம் கோளாறானது. இதனால் முக்கால் மணி நேரம் கழித்து வாக்குப் பதிவு தொடங்கியது.
    7:51 AM, 18 Apr

    தமிழகம்

    தமிழகம்
    தமிழகத்தில் நடைபெற்று வரும் 18 சட்டசபை தொகுதி இடைத் தேர்தல்களில் மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்து வருகிறார்கள். மினி சட்டசபை தேர்தல் என இடைத் தேர்தல் கருதப்படுகிறது.
    6:55 AM, 18 Apr

    தமிழகத்தின் 18 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத் தேர்தல்

    காலை 7 மணிக்கு இடைத் தேர்தல் வாக்குப்பதிவு துவக்கம்

    4:47 AM, 18 Apr

    சட்டசபை இடைத் தேர்தலில் 10 தொகுதிகளையாவது ஆட்சியை தொடர அதிமுக வெல்வது கட்டாயம்

    தமிழக ஆட்சியை தீர்மானிக்கப்போகும் தேர்தல் என்பதால் கடும் எதிர்பார்ப்பு

    சட்டசபை இடைத் தேர்தல் முடிவுகள் மே 23ம் தேதி வெளியாகும்.

    Tamilnadu assembly by election 2019- live updates

    English summary
    The Election Commission will hold by-elections for 18-Assembly constituencies on Thursday in Tamilnadu while the remaining four seats will go to polls on May 19. Here is the live updates.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X