சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

190 தொகுதிகளில் போட்டியிட திமுக திட்டம்.. உதய சூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சிகள்.. பரபர தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: விரைவில் நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் திமுக 190 இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதேநேரம் கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க அழுத்தம் கொடுக்கப்படுகிறதாம். சில கூட்டணி கட்சிகள் சம்மதித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

Recommended Video

    #TNElection2021 சென்னை: 190 தொகுதிகளில் உதய சூரியன்…? கூட்டணி கட்சிகளை மடக்கிய திமுக!

    10 வருடங்களாக ஆட்சி அதிகாரத்தில் இல்லாத திமுக இந்த முறை எப்படியும் வென்று தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று கடுமையாக வேலை செய்து வருகிறது.

    முன்எப்போதும் இல்லா அளவிற்கு அசுரபலத்துடன் போட்டியிட வேண்டும் என்று விரும்பும் திமுக, இந்த முறை அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையிலும் இது எதிரொலித்து வருகிறது.

    ஜோ பிடன் உத்தரவிட்ட முதல் இராணுவ நடவடிக்கை.. சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு படைகளை தாக்க ஒப்புதல் ஜோ பிடன் உத்தரவிட்ட முதல் இராணுவ நடவடிக்கை.. சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு படைகளை தாக்க ஒப்புதல்

    திமுக விருப்பம்

    திமுக விருப்பம்

    தமிழகத்தில் இன்னும் இரண்டு மாதத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், 190 இடங்களில் திமுக போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. இது கிட்டத்தட்ட 80 சதவீதம் ஆகும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் மதிமுக, விசிக, கொங்குநாடு மக்கள் கட்சி போன்றவற்றை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க திமுக விரும்புகிறதாம். அதற்கு கூட்டணி கட்கிகளிடம் தீவிரமாக பேசிவருகிறது. இதற்கு சில கூட்டணி கட்சிகள் சம்மதித்துவிட்டதாக தெரிகிறது.

    புதிய சின்னம் வேண்டாம்

    புதிய சின்னம் வேண்டாம்

    திமுக உதயசூரியன் சின்னத்தை விரும்ப காரணம், பொதுமக்களிடன் தங்கள் சின்னம் பெரிய அளவில் பிரபலம் என்பதால் எளிதாக வெல்ல முடியும் என்று நினைக்கிறது. அதேநேரம் புதிய சின்னம் என்றால் அதை மக்களிடம் பிரபலப்படுத்தி வெற்றிக்கு உழைப்பதற்கு கடுமையாக போராட வேண்டியதிருக்கும் என்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளதாம்.

    15 சீட்டுகள்

    15 சீட்டுகள்

    கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்தும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 41 இடங்களில் போட்டியிட்டது. அதே அளவு சீட்டைத்தான் இந்த முறையும் காங்கிரஸ் விரும்பியது. ஆனால் 15 சீட் மட்டுமே தர திமுக முன்வந்துள்ளதாம். வேண்டுமானால் 18 சீட் வரை தர வாய்ப்பு உள்ளதாம்.

    ஆட்சிக்கு வந்திருப்போம்

    ஆட்சிக்கு வந்திருப்போம்

    திமுக தரப்பு நிர்வாகி ஒருவர் இதுபற்றி கூறுகையில், காங்கிரஸ் கட்சிக்கு 20 சீடடுக்குமேல் தர வாய்ப்பு இல்லை. கன்னியாகுமரி மாவட்டத்திலும், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தின் சில பகுதிகளில் காங்கிரஸ் வலுவாக உள்ளது. கடந்த முறை இன்னும் 20 தொகுதிகளுக்குமேல் போட்டியிட்டிருந்தால் ஆட்சிக்கு வந்திருப்போம் என்றார்

    கூட்டணி கட்சிகள்

    கூட்டணி கட்சிகள்

    திமுக இந்த முறை மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், கொங்குநாடு மக்கள் கட்சி ஈஸ்வரன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றுக்கு தலா 4 சீட்டும், பார்வார்டு பிளாக், வாழ்வுரிமை கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு சீட்டும் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ், சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளை தவிர மற்ற கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க வேண்டும் என்று திமுக விரும்புகிறதாம். அதற்கு சில கூட்டணி கட்சிகளும் சம்மதித்து விட்டனவாம். ஆனால் குறைவான தொகுதிகள் என்பதால் ஏற்க மறுத்துவருவதாக சொல்லப்படுகிறது.

    சிபிஎம் கோரிக்கை

    சிபிஎம் கோரிக்கை

    சிபிஎம் கட்சி பாலகிருஷ்ணன் குறைந்தபட்சம் இரட்டை இலக்கத்தில் சீட் வேண்டும் என்று வலியறுத்தி வருகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 சீட்டுகளில் போட்டியிடுவது என்பது தற்கொலை முயற்சி என்று நினைக்கிறது. குறைந்தபட்சம் தங்களுக்கு 10 சீட்டுகள் வேண்டும் என்று கோரி வருகிறது. வடமாவட்டங்களில் தங்களுக்கு உள்ள செல்வாக்கை கூறி அதிக சீட் ஒதுக்குமாறு கோரி வருகிறது.

    English summary
    dmk likely to keep atleast 190 seats for itself. allies agree to contest on rising sun symbol. dmk may offerd congress to 15 only. other allies get each 4.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X