சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அவர்களுக்கு" சென்ற அழைப்பு.. என்ன காங். இப்படி ஒரு முடிவுக்கு வந்துடுச்சு.. திமுக இனி என்ன பண்ணுமோ?

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவிற்கு வராத நிலையில் காங்கிரஸ் கட்சி நாளை முக்கியமான மீட்டிங் ஒன்றை நடத்த உள்ளது.. இந்த மீட்டிங்கில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் என்ன பேச போகிறார்கள் என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது.

2021 சட்டசபை தேர்தலுக்காக திமுக காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. எப்போதும் போல இந்த முறையும் திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டு வாங்கிவிடலாம் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது.

ஆனால் திமுகவோ இந்த முறை ''ஸ்டிரிக்ட்" கட்சியாக மாறி சாட்டையை சுழற்றி உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கூட்டணி கட்சிக்கும் அதிக இடங்களை ஒதுக்கும் எண்ணம் திமுகவிற்கு இல்லை.

 திமுக

திமுக

திமுகவிடம் காங்கிரஸ் கட்சி 40 இடங்களை கேட்கிறது. ஆனால் திமுக 24 இடங்களுக்கும் அதிகமாக கொடுக்க முடியாது என்று கூறிவிட்டது. இது தொடர்பாக திமுக, காங்கிரஸ் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் எதிலும் முறையான தீர்வு எட்டப்படவில்லை. இரண்டு கட்சிகளுமே பேசி பேசி "டயர்ட்" ஆனதுதான் மிச்சம். கூட்டணி பேச்சுவார்த்தை இப்போதைக்கு முடியும் என்பதற்கான அறிகுறியும் தெரியவில்லை.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

எல்லாம் போக தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ் அழகிரியும் கொஞ்சம் கைவிரிப்பது போல பேச தொடங்கிவிட்டார். கூட்டணி குறித்து நாங்கள் முடிவு செய்ய முடியாது.. திமுகதான் முடிவு எடுக்கணும்.. பந்து திமுகவிடம் உள்ளதால், அவர்கள்தான் முடிவெடுப்பார்கள் என்று வெளிப்படையாக கூறிவிட்டார். காங்கிரஸ் மனசு குளிரும் விதமாக முடிவு எடுக்க வேண்டிய நிலையில் திமுக உள்ளது.

 ஆனால் என்ன

ஆனால் என்ன

திமுக இப்படி கறாராக இருப்பதை காங்கிரஸ் விரும்பவில்லை, காங்கிரஸ் இப்படி பிடிவாதமாக இருப்பதை திமுகவும் விரும்பவில்லை. இரண்டு கட்சிகளுமே அப்செட்டில் இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பாக நாளை முக்கிய மீட்டிங்கும் நடக்க உள்ளது. சென்னையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு முக்கியமான ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.

ஆலோசனை

ஆலோசனை

காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குண்டுராவ் இந்த கூட்டத்தை நடத்துகிறார். வீரப்ப மொய்லி, ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு சென்றுள்ளது. மேலிட மூத்த தலைவர்கள் இன்னும் சிலர் இதில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் முக்கியமான சில விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளனர்.

கருத்து கேட்பு

கருத்து கேட்பு

அதன்படி திமுக இப்படி குறைந்த இடங்களை ஒதுக்குகிறதே அதை ஏற்றுக்கொள்ளலாமா? அல்லது இன்னும் இடம் கேட்கலாமா? என்று கருத்து கேட்க உள்ளனர். அதோடு திமுக கூட்டணியில் நீடிப்பதும் குறித்து இதில் கருத்து கேட்க உள்ளனர். திமுக இப்படி கறாராக இருக்கிறதே என்ன செய்யலாம் என்று காங்கிரஸ் ஆலோசிக்க உள்ளது. இந்த மீட்டிங்தான் திமுக காங்கிரஸ் கூட்டணி குறித்த அடுத்த கட்ட நகர்வுகளை தீர்மானிக்கும்.

முடிவு

முடிவு

இப்படி திடீரென காங்கிரஸ் மீட்டிங்கில் குதித்து இருப்பது திமுகவிற்கு கொஞ்சம் பிபி ஏற்றியுள்ளது. காங்கிரஸ் ஒருவேளை கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து ஆலோசனை செய்தால் திமுக அதற்கு என்ன முடிவு எடுக்கும், திமுக அதை எப்படி எதிர்கொள்ளும், திமுக சமாதானம் செய்ய முயற்சி செய்யுமா என்று கேள்விகள் எழுந்துள்ளன.

English summary
Tamilnadu Assembly Election: Congress to talk with its senior members on an alliance with DMK as the talks are failed so far.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X