சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2016ல் நடந்த அதே சம்பவம்..கதவை இழுத்து மூடிய ஸ்டாலின்.. அதிர்ந்து போன கூட்டணிகள்.. ஓவர் கான்பிடன்ஸ்

Google Oneindia Tamil News

சென்னை: பிடிவாதம்.. கண்டிப்பு.. கறார்.. தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் திமுகவின் நிலைப்பாட்டை இந்த மூன்று வார்த்தையில் கூறிவிடலாம். திமுகவிற்கு என்ன ஆகிவிட்டது, ஏன் இவ்வளவு வீம்பாக இருக்கிறது என்று கூட்டணி கட்சிகளே புலம்பும் அளவிற்கு திமுக மிகவும் இறுக்கமாக இருக்கிறது.. அதுவும் நேற்று நடந்த சில விஷயங்கள் கூட்டணி கட்சிகளை விரக்தியின் விளிம்பிற்கே கொண்டு சென்றுள்ளன.

2021 தமிழக சட்டசபை தேர்தலுக்கு சரியாக ஒரு மாதம் உள்ளது. வேட்பாளர்களை அறிவித்து தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் திமுக இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை முடிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. நகரும் ஒவ்வொரு மணி நேரமும் திமுகவிற்கு ஒரு வகையில் பின்னடைவாக மாறி வருகிறது.

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 5 அல்லது 6 தொகுதிகள்.. இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது திமுக கூட்டணியில் விசிகவுக்கு 5 அல்லது 6 தொகுதிகள்.. இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

அதிலும் காங்கிரஸ், மதிமுக ஆகிய இரண்டு கட்சிகளை திமுக நடத்தும் விதம் கூட்டணிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திமுக கொஞ்சம் மிதப்பில் செயல்படுவதாக கூட்டணி கட்சிகளுக்குள் பேசிக்கொள்ள தொடங்கி உள்ளனர்.

நேற்று என்ன நடந்தது

நேற்று என்ன நடந்தது

நேற்று நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையிலேயே திமுக தனது கடைசி நிலைப்பாட்டை எடுத்துவிட்டது என்கிறார்கள். இதுதான் கொடுக்க முடியும், இதற்கு மேல் ஒரு சீட் கூட கொடுக்க முடியாது என்று திமுக கதவை சாத்திவிட்டது. இதனால் மதிமுக , காங்கிரஸ் போன்ற கட்சிகள் அடுத்த என்ன செய்யலாம், கூட்டணியில் நீடிக்கலாமா என்ற நிலைக்கு சென்றுவிட்டது.

நீடிக்கலாமா?

நீடிக்கலாமா?

அதுவும் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் பேசப்பட்ட தொகுதிகளை விட குறைவான தொகுதிகளை கொடுக்கவே திமுக முன்வந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு சொன்ன தொகுதிகளை விட குறைவான தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கும் எண்ணத்திற்கு திமுக சென்றுவிட்டதாம். காங்கிரஸ் கட்சிக்கு 18 தொகுதிகள் மட்டுமே கொடுப்போம் என்று திமுக கூறியுள்ளது.

எத்தனை தொகுதிகள்

எத்தனை தொகுதிகள்

விசிகவிற்கு 5 தொகுதிகள், மதிமுகவிற்கு 4 தொகுதிகள் கொடுப்பதாக திமுக கூறியுள்ளது. முன்னதாக காங்கிரசுக்கு 24 வரை கொடுக்க திமுக முன் வந்தது. அதேபோல் மதிமுகவிற்கு 8 வரை கொடுக்கும் எண்ணத்தில் திமுக இருந்தது. ஆனால் தற்போது திமுக இன்னும் தீவிரமாக சென்று, மேலும் இடங்களை குறைத்து உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

சிக்கல்

சிக்கல்

2016ல் இதேபோல்தான் பெரிய கூட்டணி அமைக்க விருப்பம் இன்றி திமுக கறாராக செயல்பட்டது. இதுதான் மக்கள் நல கூட்டணி என்ற மூன்றாவது அணி உருவாக்கவும் ஒரு வகையில் காரணமாக இருந்தது. தற்போது அதே பாதையில் திமுக செல்வது கூட்டணி கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திமுகவின் இந்த செயலை கூட்டணி கட்சிகள் விரும்பவில்லை என்கிறார்கள்.

ஓவர் கான்பிடன்ஸ்

ஓவர் கான்பிடன்ஸ்

திமுக கொஞ்சம் ஓவர் கான்பிடன்ஸ் கொண்டு செயல்படுகிறது, தனிப்பெரும்பான்மை பெற வேண்டும் என்று நினைக்கிறது, கூட்டணி காட்சிகளை மதிக்கவில்லை. காங்கிரஸ், மதிமுக தலைவர்களே புகார் வைக்கும் அளவிற்கு நிலைமை சென்றுள்ளது. 185+ தொகுதிகளில் போட்டியிடும் எண்ணத்தில் திமுக இருக்கிறது.

 திமுக தரப்பு நியாயம்

திமுக தரப்பு நியாயம்

கூட்டணிகளுக்கு அதிக இடம் கொடுக்க முடியாது. காங்கிரஸ் அதிக இடங்களில் போட்டியிட்டு மோசமாக தோல்வி அடைவதாக திமுக புகார் வைக்கிறது. காங்கிரசின் டிராக் ரெக்கார்டை பார்த்தால் திமுக சொல்வதும் ஒரு பக்கம் நியாயமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. வெற்றிபெறும் இடங்களை மட்டும் கொடுப்போம், வேண்டுமானாலும் அமைச்சரவையில் இடம் ஒதுக்கிக்கொள்ளலாம் என்ற மனநிலையில் திமுக இருக்கிறது. உறுதியான வெற்றிதான் முக்கியம் என்பது திமுகவின் வாதமாக இருக்கிறது.

கண்டிப்பு

கண்டிப்பு

இதுதான் திமுக கட்சியின் கண்டிப்பிற்கு காரணம். 2016ல் இதேபோல் செய்துதான் திமுக தோல்வி அடைந்தது. இதன்பின் லோக்சபா தேர்தலில் கூட்டணி கட்சிகளை அரவணைத்து சென்ற திமுக தற்போது மீண்டும் இறுக்கமான மனநிலைக்கு சென்றுள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க இந்த கண்டிப்பு திமுகவிற்கே எதிராக திரும்பும் சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன.

English summary
Tamilnadu Assembly Election: DMK is still so stubborn and stiff in its talks with the alliance parties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X