சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுதாங்க நடக்குது.. முணுமுணுக்கும் தலைகள்.. "அதை" நம்பி தேவையில்லாத ரிஸ்க் எடுக்கும் திமுக.. பின்னணி

Google Oneindia Tamil News

சென்னை: கூட்டணி கட்சிகளின் தயவு தேவையில்லை.. தனியாக நின்றாலே ஜெயிக்கலாம் என்ற அளவிற்கு திமுக நம்பிக்கையோடு இருக்கிறதாம்.. இந்த தேர்தலில் என்ன நடந்தாலும் திமுகதான் வெற்றிபெறும் என்று கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் நம்பிக்கை வைத்துள்ளனராம்!

கடந்த மார்ச் 1ம் தேதி.. தமிழகம் முழுக்க திமுக தொண்டர்கள் கட்சித் தலைவர் ஸ்டாலினின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வந்தனர். தேர்தல் நெருங்குவதால் கூடுதல் உற்சாகத்தோடு பிறந்த நாளை கொண்டாடினார்கள்.

அப்போது பிரஷாந்த் கிஷோர் செய்த டிவிட் ஒன்று திமுகவினரிடையே உற்சாகத்தை அதிகப்படுத்தியது. திமுகவின் தேர்தல் ஆலோசகர் ஐபேக் பிரஷாந்த் கிஷோர் மிகவும் நம்பிக்கையோடு செய்த டிவிட் தமிழக அரசியலில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது.

 மறுபடி கம்பேக் வேணும்னா இதை பண்ணியே ஆகணும்; ஸ்டாலினிடம் தெரிவித்த ஐபேக்... உறைந்துபோன சீனியர்கள்! மறுபடி கம்பேக் வேணும்னா இதை பண்ணியே ஆகணும்; ஸ்டாலினிடம் தெரிவித்த ஐபேக்... உறைந்துபோன சீனியர்கள்!

டிவிட்

டிவிட்

பிரஷாந்த் கிஷோர் தனது டிவிட்டில்... தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களின் தலைமையின் கீழ் வரப்போகிற சட்டசபை தேர்தலில் திமுக இமாலய வெற்றியை பெற போகிறது என்பதால் இந்த வருடம் உங்களுக்கும், தமிழக மக்களுக்கு முக்கியமான வருடமாக இருக்க போகிறது என்று பிரஷாந்த் கிஷோர் குறிப்பிட்டு இருந்தார். திமுக கண்டிப்பாக வெற்றிபெறும் என்று அறுதியிட்டு இவர் கூறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

நம்பிக்கை

நம்பிக்கை

தேர்தல் வெற்றி மீது நம்பிக்கை வைக்கலாம், ஆனால் இந்த அளவிற்கு உறுதியாக பிரஷாந்த் கிஷோர் எப்படி வெற்றிபெறுவோம் என்று கூறுகிறார் என்று இணையத்தில் பலர் ஷாக் ஆனார்கள். அதிமுக நன்றாக இருக்கிறது, கூட்டணி வலுவாக இருக்கிறது, வன்னியர் உள்ஒதுக்கீடு, விவசாய கடன் தள்ளுபடி என்று இபிஎஸ் இமேஜ் இமாலயத்தை தொட்டு விட்டது. அப்படி இருக்கும் போது திமுகவின் வெற்றியை எப்படி பிகே இவ்வளவு உறுதியாக நம்புகிறார் என்ற கேள்வி கண்டிப்பாக பலருக்கும் எழுவது இயல்புதான்.

இல்லை

இல்லை

ஆனால் திமுகவின் இந்த வெற்றியை பிகே மட்டுமே நம்பவில்லை.. திமுகவிற்கு உள்ளேயே மூத்த உறுப்பினர்கள், கட்சி தலைமைக்கு நெருக்கமான பல குடும்ப உறுப்பினர்களும் திமுகவின் வெற்றியை உறுதியாக நம்புகிறார்கள். அதுவும் இந்த சட்டசபை தேர்தலில் திமுக தனித்து நின்றாலே வெற்றிபெற்றுவிடும் என்று திமுகவில் இருக்கும் முக்கிய தலைகள் பலர் நம்புகிறார்கள்.

டேட்டா

டேட்டா

திமுகவின் கட்சியில் இருக்கும் பெரிய தலைகளே இப்படி நம்புவதற்கு பிகேதான் காரணம் என்றும் கூறுகிறார்கள். தொகுதி வாரிய, மண்டல வாரியாக இவர் கொடுத்த டேட்டாக்களை பார்த்துதான் திமுக தலைமை இப்படி சந்தோஷத்தில் இருக்கிறது. திமுகவிற்கு கூட்டணிகள் தயவு அதிகம் தேவை இல்லை. சில தொகுதிகளில் கூட்டணிகளின் உதவி இருந்தால் போதும் என்று பிகே கொடுத்த டேட்டாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உற்சாகம்

உற்சாகம்

சில தொகுதிகளில் மட்டும்தான் சிக்கல். மற்றபடி 190 தொகுதிகள் வரை திமுக தைரியமாக களமிறங்கலாம் என்று பிகே கொடுத்த பூஸ்ட் காரணமாக திமுக மகிழ்ச்சியில் இருக்கிறது. இதனால் உற்சாகம் அடைந்த திமுக தற்போது கண்டிப்பாக வென்றுவிடும், தனியாகவே வென்றுவிடும் என்ற நம்பிக்கையில் உள்ளது என்கிறார்கள். திமுகவிற்கு கூட்டணி எல்லாம் ஒரு சேஃப்டிக்குத்தான் என்றும் கூறுகிறார்கள்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

பிகே என்பவர் அரசியலை, தேர்தலை டேட்டா மூலம் அணுக கூடியவர். நம்பர், டேட்டா இதெல்லாம் பொய் சொல்லாது என்று நம்ப கூடியவர். ஆனால் தேர்தல் களம் என்பது வெறும் நம்பர் இல்லை.. அது வேறு மாதிரி இருக்கும். அதிலும் தமிழக தேர்தல் களம் மிகவும் வித்தியாசமானது. இதில் டேட்டாக்களை மட்டும் நம்பி ரிஸ்க் எடுக்க முடியாது, எடுக்க கூடாது. ஆனால் அந்த ரிஸ்க்கைத்தான் தற்போது திமுக எடுத்து வருகிறது.

புள்ளி விவரம்

புள்ளி விவரம்

புள்ளி விவரங்களை வைத்து 190 இடங்கள் வரை போட்டியிடும் எண்ணத்தில் திமுக இருக்கிறது. இதுதான் கூட்டணிக்கு அதிக இடங்களை ஒதுக்காமல் திமுக நெருக்கடி கொடுக்க காரணம். களத்தில் இதெல்லாம் சரிப்பட்டு வருமா என்பது சந்தேகமாக இருக்கிறது. திமுக கொஞ்சம் இறங்கிபோனால் நன்றாக இருக்கும், இவ்வளவு நம்பிக்கை அவசியமா என்றும் கட்சிக்குள் சிலர் முணுமுணுக்க தொடங்கி உள்ளனர். சில தலைவர்கள் மட்டும் இந்த டேட்டா மீது பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர்.

அவசரமா?

அவசரமா?

கொஞ்சம் அவசரப்பட்டு திமுக ரிஸ்க் எடுக்கிறதோ என்று ஒரு பக்கம் கேள்வி நிலவினாலும், பிகேவின் டிராக் ரெக்கார்ட் திமுகவிற்கு கொஞ்சம் நிம்மதி அளிக்கிறது. உபி தேர்தலில் காங்கிரஸுக்காக வேலை செய்து தோல்வி அடைந்ததை தவிர வேறு எங்கும் பிகே தோல்வி அடைந்ததே இல்லை என்ற நம்பிக்கையில் திமுக இருக்கிறது. ஆனால் வடஇந்திய இந்திய அரசியல் வேறு தமிழக அரசியல் வேறு.. பிகேவின் டேட்டா பாலிடிக்ஸ் வேலை நம்ம ஊரில் செய்யுமா என்பது மே மாதம்தான் தெரியும்!

English summary
Tamilnadu Assembly Election: DMK is taking huge risk by seeing data and planning alliance with parties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X