சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வரும் ஆனா வராது.. ஜெயக்குமார் தூக்கிப் போட்டதை.. திருப்பி வாங்கி.. ரிட்டர்ன் பதிலடி கொடுத்த ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: வடிவேல் திரைப்படத்தில் வந்த காமெடி வசனமான வரும் ஆனா வராது என்பதை நேற்றைய தினம் ஜெயக்குமார் கூறி சிரிப்பை வரவழைத்த நிலையில் தற்போது ஸ்டாலினும் அதே டயலாக்கை கூறியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சி மாற்றம் எப்போது வரும் என எதிர்க்கட்சியான திமுக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அதிமுக அரசு கவிழ ஏராளமான சூழல்கள் நிலவிய போதிலும் அதிலிருந்து அதிமுக தப்பிக் கொண்டே இருந்தது.

இந்த நிலையில் சட்டசபை இடைத்தேர்தலின் போது நிச்சயம் ஆட்சி கவிழும் என திமுக எதிர்பார்த்தது. ஆனால் அது நடக்கவில்லை. எனினும் ஸ்டாலினோ நிச்சயம் ஆட்சி கவிழும், திமுக ஆட்சி பொறுப்பேற்கும் என்றே கூறி வருகிறார்.

யாருப்பா அந்த 25 பேர்.. எனக்கே பாக்கணும் போல் இருக்கு.. தட்டி கொடுத்து வாழ்த்திய தமிழிசை!யாருப்பா அந்த 25 பேர்.. எனக்கே பாக்கணும் போல் இருக்கு.. தட்டி கொடுத்து வாழ்த்திய தமிழிசை!

மாற்றம்

மாற்றம்

இதையேத்தான் திமுக பிரமுகர்களும் கூறி வருகின்றனர். நேற்று சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போது திமுக எம்எல்ஏ சேகர்பாபு பேசுகையில் தமிழகத்தில் நிச்சயம் ஒருவர் மாற்றத்தை கொண்டு வருவார், அவர்தான் ஸ்டாலின் என்றார் சேகர்பாபு.

மீண்டும் கூடியது

மீண்டும் கூடியது

அப்போது நடிகர் வடிவேல் படத்தின் பிரபல வசனமான வரும் ஆனா வராது என அமைச்சர் ஜெயக்குமார் டைமிங்காக கூறிய போது அவையில் சிரிப்பலை எழுந்தது. இந்த நிலையில் இன்று அவை மீண்டும் கூடியது.

சம்பத்

சம்பத்

அப்போது தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தன் துறை சார்ந்த மானிய கோரிக்கை விவாதம் மீது பேசினார். அவர் கூறுகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற நிறுவனங்கள் தமிழகத்தில் விரைவில் தொழில் தொடங்க வரும் என்றார் சம்பத்.

சிரிப்பலை

சிரிப்பலை

அப்போது சற்றும் தாமதிக்காத முக ஸ்டாலின், இது போன்ற ஒப்பந்தங்களை போட்டு 4 ஆண்டுகள் ஆகின்றன. எனவே தொழிற்சாலைகள் வரும் ஆனா வராது என ஜெயக்குமார் பேசிய டயலாக்கையே ஸ்டாலின் பேசினார். இதனால் அவையில் தாங்க முடியாத சிரிப்பு சப்தம் எழுந்தது.

English summary
Tamilnadu Assembly had laughing sound like yesterday after MK Stalin speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X