ஜூன் 10 ஆம் தேதி தொடங்குகிறது தமிழக சட்டசபை கூட்டத்தொடர்.. ஒரு மாதம் நடைபெறும் என தகவல்
சென்னை: வரும் ஜூன் 10 ஆம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் ஜூன் மாதம் 10ஆம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 10ஆம் தேதி தொடங்கும் கூட்டத்தொடர் ஒரு மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும் என கூறப்படுகிறது.
மேலும் சபாநாயகர் மீது திமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பும் நடைபெறும் என தெரிகிறது.
Comments
English summary
Tamilnadu assembly session begins on June 10.
Story first published: Tuesday, May 28, 2019, 8:53 [IST]