சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரதமர் மோடியின் பிறந்தநாள்.. 70 அடி நீள கேக் வெடி கொண்டாட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் மோடியின் 70ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி தமிழக பாஜக சார்பில் மரம் நடுவிழா, 70 அடி நீள கேக்கை வெட்டி கொண்டாட்டம் நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பாஜகவினர் கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.

Tamilnadu BJP celebrates PM Narendra Modis 70th birthday

மோடியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், பிரபலங்கள், வெளிநாட்டுகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாஜக தலைவர் ஜே பி நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்கள்.

Tamilnadu BJP celebrates PM Narendra Modis 70th birthday

ரஷ்ய அதிபர் புதின், நேபாள பிரதமர் ஷர்மா ஒலியும் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் நாடு முழுவதிலும் சேவை வாரம் கொண்டாடப்படுகிறது.

வீட்டுப்பணியில் தொடங்கி நாட்டுப்பணி வரை... தன்னம்பிக்கை தளகர்த்தர் பிரதமர் மோடி..! வீட்டுப்பணியில் தொடங்கி நாட்டுப்பணி வரை... தன்னம்பிக்கை தளகர்த்தர் பிரதமர் மோடி..!

செப்டம்பர் 14 தொடங்கிய இந்த சேவை வாரம் 20 ம் தேதி வரை நடைபெறுகிறது. கட்சி தொண்டர்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

Tamilnadu BJP celebrates PM Narendra Modis 70th birthday

சேவை வார விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் போன்ற பணிகளில் பாஜக தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக பாஜக சார்பில் மோடியின் பிறந்தநாளையொட்டி 70 மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தலைமை தாங்கியுள்ளார். குதிரை பூட்டிய சாரட் வண்டியில் முருகன் பயணம் செய்தார். 70 அடி நீளத்தில் கேக்கை வெட்டினார் முருகன்.

English summary
Tamilnadu BJP celebrates PM Narendra Modi's 70th birthday by planting trees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X