சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வடக்கில் இருந்து வரும் முக்கிய புள்ளி.. தமிழக பாஜக தலைவர் யார்?..நாளை வெளியாகிறதா அறிவிப்பு?

தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் யார் என்று நாளை பெரும்பாலும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக பாஜக கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் யார் என்று நாளை பெரும்பாலும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக பாஜக கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக உள்ளது. தெலுங்கானா ஆளுநராக தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி ஏற்றார். அவர் சென்ற பின் தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படவில்லை.

தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கான தேசிய பாஜக தலைமை பல்வேறு ஆலோசனைகளை நடத்தியது. ஆனால் இதில் சரியாக முடிவு எடுக்க முடியாமல் இருந்தது.

தேசிய தலைவர்

தேசிய தலைவர்

இன்றுதான் பாஜகவின் மூத்த தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதையடுத்து பாஜகவில் தேசிய செயல் தலைவராக உள்ள ஜே.பி.நட்டா வரும் 20ம் தேதி பாஜக தேசிய தலைவராக அறிவிக்கப்படுகிறார். 22ம் தேதி பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர் கட்சியில் போட்டியின்றி தேர்வாக இருக்கிறார்.

பாஜக புதுச்சேரி

பாஜக புதுச்சேரி

அதேபோல் இன்னொரு பக்கம் மீண்டும் பாஜக புதுச்சேரி மாநில தலைவராக வி.சாமிநாதன் தேர்வானார். நேற்றுதான் இதற்கான அறிவிப்பு வெளியானது. இதேபோல் தமிழக பாஜக தலைவருக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. நாளை இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

கடைசியாக எப்படி

கடைசியாக எப்படி

கடைசியாக தமிழக பாஜக தலைவர்களுடன் நடத்திய ஆலோசனையில் தமிழக பாஜக தலைவர் தேர்வு செய்யப்பட்டுவிட்டார் என்று கூறுகிறார்கள். போட்டியின்றி முக்கியமான நபர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லி தலைமை இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத்தான் நாளை அறிவிப்பார்கள் என்கிறார்கள்.

என்ன பதவி

என்ன பதவி

இந்த தலைவர் பதவிக்காக எச். ராஜா, பி. முருகானந்தம், சி.பி ராதாகிருஷ்னன், வானதி ஸ்ரீநிவாசன் ஆகியோர் இடையில்தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஆனால் இவர்கள் இல்லாமல் புது முகம் ஒருவர்தான் தலைவராக வருவார். தேசிய அரசியலில் இருக்கும் ஒருவர் தலைவராக வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

மத்தியில் யார்

மத்தியில் யார்

பெரும்பாலும் மத்தியில் இருக்கும் அமைச்சர் ஒருவர், தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக பாஜக தலைவராக வாய்ப்புள்ளது. அவருக்கு முதல்வராகும் கனவு உள்ளது. அதனால் அவருக்கு தமிழக பாஜக தலைவர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர்

அமைச்சராக இருக்கும் அவர் மீது சில புகார்கள் உள்ளது. அதனால் அவரின் அமைச்சரவைக்கு வேறு நபரை நியமிக்க பாஜக ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக நாளை பெரும்பாலும் அறிவிப்பு வெளியாகலாம் என்று கமலாலயம் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

English summary
Tamilnadu BJP chief announcement may come tomorrow says Sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X