சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்னும் 10 நாள்.. முக்கியமான ஒருவர் வருகிறார்.. தமிழக பாஜக தலைவர் யார்?.. முரளிதர ராவ் நாள் குறிப்பு

இன்னும் 10 நாட்களில் தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று தமிழகத்துக்கான பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் அறிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: இன்னும் 10 நாட்களில் தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று தமிழகத்துக்கான பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் அறிவித்துள்ளார்.

தற்போது தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக உள்ளது. தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. தெலுங்கானா ஆளுநராக தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி ஏற்று இருக்கிறார்.

இந்த தலைவர் பதவிக்காக எச். ராஜா, பி. முருகானந்தம், சி.பி ராதாகிருஷ்னன், வானதி ஸ்ரீநிவாசன் ஆகியோர் இடையில்தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. விரைவில் தலைவர் யார் என்று அறிவிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

2 நாள் பயணமாக அந்தமான் புறப்பட்டார் ஸ்டாலின்... நாளை கருணாநிதி சிலைதிறப்பு விழா2 நாள் பயணமாக அந்தமான் புறப்பட்டார் ஸ்டாலின்... நாளை கருணாநிதி சிலைதிறப்பு விழா

என்ன எப்படி

என்ன எப்படி

இந்த நிலையில் தமிழகத்துக்கான பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் அளித்த பேட்டியில், இன்னும் 10 நாட்களில் தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார். வலுவான நபர் ஒருவர் பாஜக தலைவராக வர உள்ளார். கட்சி மேலிடம் இது குறித்து ஆலோசித்து வருகிறது.

வருகிறார்

வருகிறார்

சில தலைவர்களின் பெயர்கள் பட்டியலில் உள்ளது. விரைவில் அவர்களில் ஒருவரை தேர்வு செய்வோம், தமிழக பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. தலைவர் நியமனம் அதற்கு ஊக்குவிப்பு சாதனமாக அமையும்.

விரைவில் நடக்கும்

விரைவில் நடக்கும்

விரைவில் இது தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்போம். சிஏஏ ஆதரவு பேரணி பெரிய அளவில் வெற்றிபெற்றது. மக்களுக்கு இது குறித்து புரிய துவங்கி உள்ளது. மக்கள் சிஏஏவை ஆதரிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

சென்னை

சென்னை

நாங்கள் சென்னையில் நடத்திய பேரணியில் பெரிய அளவில் கூட்டம் கூடியது. திமுக தலைவர் ஸ்டாலின் தேவையில்லாத வதந்திகளை பரப்புகிறார். அவருடன் சிஏஏ குறித்து விவாதிக்க நான் ரெடி.. அவர் ரெடியா என்று கூற வேண்டும், என்று முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.

English summary
Tamilnadu BJP chief announcement will come soon in 10 days says, Muralidara Rao.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X