சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உமர் அப்துல்லாவிற்கு 'ஷேவிங் ரேசர்' அனுப்பிய தமிழக பாஜக.. சர்ச்சை டிவிட்.. கடைசியில் டெலிட்!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவிற்கு ஷேவிங் ரேசர் ஆர்டர் செய்து, அதை தமிழக பாஜக டிவிட் செய்திருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவிற்கு ஷேவிங் ரேசர் ஆர்டர் செய்து, அதை தமிழக பாஜக டிவிட் செய்திருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக செய்த டிவிட்டை தற்போது டெலிட் செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது. அப்போது தொடங்கிய பிரச்சனை இன்னும் முடியவில்லை.ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை தொடர்ந்து அங்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இன்னும் காஷ்மீர் ராணுவ கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

அங்கு 144 அறிவிக்கப்பட்டது, அதோடு மாநிலம் முழுக்க மொத்தமாக நிறைய தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி உட்பட தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உமர் அப்துல்லா எப்படி

உமர் அப்துல்லா எப்படி

வீட்டுக்காவலில் இருக்கும் தலைவர்களில் மிக முக்கியமானவர் உமர் அப்துல்லா என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் கடந்த இரண்டு தினங்கள் முன் வெளியானது. முகத்தில் நீண்ட தாடியுடன் அடையாளமே தெரியாத அளவுக்கு, வயதான தோற்றத்தில் மாறிப்போன உமர் அப்துல்லாவின் புகைப்படம் இணையத்தில் வெளியானது. இந்த புகைப்படத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

தாடியுடன் புகைப்படம்

தாடியுடன் புகைப்படம்

இதை பகிர்ந்த மமதா பானர்ஜி உமர் அப்துல்லாவை என்னால் அடையாளம் காண முடியவில்லை. அவருக்கு இப்படி நிகழ்ந்ததை எண்ணி, நான் சோகமாக இருக்கிறேன். ஒரு ஜனநாயக நாட்டில், அதிலும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் இப்படி இதுபோன்று நிகழ்வது அதிர்ச்சி அளிக்கிறது. இதெல்லாம் எப்போது முடியும், என்று மம்தா கவலைத் தெரிவித்திருந்தார். அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலினும் இதை பகிர்ந்து தனது வருத்தத்தை தெரிவித்து இருந்தார்.

தமிழக பாஜக எப்படி

இந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் தமிழக பாஜக இந்த புகைப்படத்தை வைத்து உமர் அப்துல்லாவை கிண்டல் செய்துள்ளது. அதில், உமர் அப்துல்லாவின் ஊழல் செய்த கூட்டாளிகள் எல்லாம் வெளியே இருக்கும் போது உமர் மட்டும் இப்படி இருப்பதை பார்க்க வருத்தமாக இருக்கிறது. உங்களுக்கு இதை அனுப்பி வைக்கிறோம். இதை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் உங்கள் காங்கிரஸ் நண்பர்களை அணுகுங்கள், என்று பாஜக டிவிட்டில் கூறியுள்ளது.

டிவிட் எப்படி

டிவிட் எப்படி

தமிழக பாஜக அந்த டிவிட்டில், ஷேவிங் செய்ய உதவும் ரேசரை அமேசானில் உமர் அப்துல்லாவின் விலாசத்திற்கு ஆர்டர் செய்துள்ளது. தமிழக பாஜகவின் இந்த டிவிட் தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒருவரின் கொள்கையை அரசியலை நீங்கள் ஏற்கலாம். ஆனால் அதற்கு என்று இப்படி அவரை கிண்டல் செய்வது தவறு. அரசியல்கட்சியின் டிவிட்டர் பக்கம் அதற்கு உரிய மரியாதையுடன் செயல்பட வேண்டும் என்று பலர் விமர்சனம் செய்துள்ளனர். இந்த தொடர் சர்ச்சையை தொடர்ந்து பாஜக டிவிட்டை டெலிட் செய்துள்ளது.

English summary
Tamilnadu BJP IT cell sends Shaving Razer to Omar Abdullah in Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X