சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஸ் இவர்தான்.. ஆனா பிக்பாஸ் அவரு.. எச்.ராஜாவை நேரில் சந்தித்த எல்.முருகன்.. பாஜகவில் என்னாச்சு?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தேசிய செயலாளர் எச். ராஜாவை நேற்று நேரில் சந்தித்தார். எச். ராஜா வீட்டிற்கே சென்று எல்.முருகன் சந்திப்பு நடத்தினார்.

தமிழக பாஜக தலைவராக எல். முருகன் நியமிக்கப்பட்டதே ஆச்சர்யமான விஷயம்தான். பாஜக மூத்த தலைவர்கள் எச். ராஜா, வானதி சீனிவாசன், சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இந்த தலைவர் பதவிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவர்களுக்கு இடையில்தான் கடுமையான போட்டி நிலவியது.

முக்கியமாக எச். ராஜா இந்த பதவிக்காக தீவிரமாக முயன்றார். இதற்காக தேசிய பாஜக தலைவர்களிடம் பலமுறை இது தொடர்பாக பேசினார். ஆனால் எல். முருகனுக்குத்தான் கடைசியில் தலைவர் பதவி கிடைத்தது.

தலைவர் பதவி

தலைவர் பதவி

எல்.முருகன் தலைவராக இருந்தாலும் கூட தமிழக பாஜக கட்சிக்குள் சில பிக்பாஸ்கள் எப்போதும் போல தன்னிச்சையாக செயல்படுவார்கள் என்று கூறப்படுகிறது. முன்பு தமிழக பாஜக தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் இருந்தார். ஆனாலும் எச். ராஜா, வானதி சீனிவாசன், சிபி ராதாகிருஷ்ணன், பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தன்னிச்சையாக செயல்பட்டனர்.

கஷ்டம்

கஷ்டம்

இவர்களை சமாளிக்க தமிழிசை அப்போதே பெரிய அளவில் கஷ்டப்பட்டார். எச். ராஜா தன்னுடைய இஷ்டத்திற்கு ஏதாவது பேசி சர்ச்சை எழுப்புவார். இதற்கு தமிழிசை கஷ்டப்பட்டு சமாளிப்பு பணிகளை செய்து சர்ச்சையை சரி செய்வார். இப்படித்தான் பாஜக மூத்த தலைவர்கள் உருவாக்கிய சர்ச்சையை எல்லாம் தமிழிசை கஷ்டப்பட்டு சமாளித்து வந்தார். தற்போது அதே பணியை எல்.முருகன் செய்வார் என்கிறார்கள்.

வாய்ஸ் இருக்காது

வாய்ஸ் இருக்காது

தமிழக பாஜகவில் எச்.ராஜா, வானதி சீனிவாசன், சிபி ராதாகிருஷ்ணன், பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மூத்த தலைவர்கள். ஆனால் எல். முருகன் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறார். இதனால் எல். முருகன் கட்சித் தலைவராக இருந்தாலும் கூட அவருக்கு கட்சியில் பெரிய வாய்ஸ் இருக்காது என்கிறார்கள். கட்சியில் அவரால் தன்னிச்சையாக பெரிய முடிவுகளை எடுக்க முடியாது என்று கூறுகிறார்கள்.

கூட்டணி கட்சிகள்

கூட்டணி கட்சிகள்

மேலும் தேர்தல் என்று வந்தால் கூட்டணி வைப்பது குறித்தும் முருகன் தனியாக பேச முடியாது. அவர் அதிமுக தலைவர்களுடன் அவ்வளவு நெருக்கம் இல்லை. எச். ராஜா, பொன்னார் போன்ற யாராவதுதான் அதிமுக, பாமகவுடன் பேச வேண்டும். அதேபோல் இந்த மூத்த தலைவர்கள் யாரும் பெரிய அளவில் எல்.முருகனை கண்டுகொள்ளவில்லை. இதனால்தான் அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின் யாரும் அவரை சென்று நேரில் சந்திக்கவில்லை. பாஜக கட்சிக்குள் உள்ளே எல். முருகனுக்கு பெரிய அளவில் தொண்டர் படை இல்லை.

என்ன கோஷ்டி

என்ன கோஷ்டி

காங்கிரஸ் கட்சி போலவே பாஜகவிலும் தமிழகத்தில் நிறைய கோஷ்டி இருக்கிறது. எச். ராஜா கோஷ்டி, சிபி ராதாகிருஷ்ணன் கோஷ்டி, கருப்பு முருகானந்தம் கோஷ்டி என்று தமிழக பாஜகவில் நிறைய கோஷ்டிகள் இருக்கிறது. ஆனால் எல். முருகனுக்கு அப்படி பெரிய தனிப்பட்ட ஆதரவாளர்கள் கோஷ்டி எதுவும் இல்லை. இந்த கோஷ்டிகள் எப்போது வேண்டுமானாலும் எல். முருகனுக்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது. தேர்தல் நேரத்தில் எல்.முருகன் இவர்களை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

ஏன் சந்திப்பு

ஏன் சந்திப்பு

இதனால் இனிமேல்தான் தனக்கு என்று முருகன் ஒரு குழுவை உருவாக்க வேண்டும். தேசிய பாஜகவில் கொஞ்சம் பிரபலமாக இருந்த எல்.முருகன் தமிழக பாஜகவில் அவ்வளவு பிரபலம் இல்லை என்கிறார்கள். அவரால் எளிதாக தனக்கு என்று ஒருவர் 'பவர்' வட்டத்தை தமிழகத்தில் உருவாக்க முடியாது. இதனால்தான் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தேசிய செயலாளர் எச். ராஜாவை நேற்று நேரில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எச். ராஜாவின் சப்போர்ட் தனக்கு தேவை.

நேரில் சென்றார்

நேரில் சென்றார்

அவரின் ஆதரவு தேவை என்று எல். முருகன் நினைத்துள்ளார். இதனால் எச். ராஜா வீட்டிற்கே சென்று எல்.முருகன் சந்திப்பு நடத்தினார். அதாவது நீங்கள் என்னை வந்து பார்க்க வேண்டாம். நானே உங்களை வந்து பார்க்கிறேன் என்று நேராக வீட்டிற்கு சென்றுள்ளார். தமிழக பாஜகவை கட்டுக்கொள் கொண்டு வந்து அதிகாரத்துடன் செயல்பட வேண்டும் என்று அவர் இப்படி செய்துள்ளார்.

ஆலோசனை செய்தனர்

ஆலோசனை செய்தனர்

இதற்கு எச். ராஜாவும் முழு ஆதரவு தருவார் என்றே கூறப்படுகிறது. அதனால் எச். ராஜா பிக்பாஸ் போல தமிழக பாஜகவில் செயல்பட வாய்ப்புள்ளது. எல். முருகன் செய்யும் பணிகளை எல்லாம் கவனிப்பார். தேவையான நேரத்தில் எல். முருகனுக்கு முக்கிய உத்தரவுகளை எச். ராஜா கொடுப்பார் என்று கூறப்படுகிறது. தமிழக பாஜகவில் விரைவில் இதனால் அதரடி திருப்பங்கள் நடக்கலாம் என்று கூறுகிறார்கள்.

English summary
Tamilnadu BJP President L.Murugan meets H Raja - Here is the reason.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X